ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

மட்டக்களப்பபில் இடம்பெற்ற ஈரோஸ் ஜனநாயக முன்னணி பிரகடன நிகழ்வு .

(லியோ )

இலங்கையின் அரசியல் வரலாற்றில் புரட்சியினை ஏற்படுத்திய ஈழப் புரட்சி அமைப்பினால் ஈரோஸ் ஜனநாயக முன்னணி பிரகடன நிகழ்வு நேற்று மட்டக்களப்பில் இடம்பெற்றது .


இந்நிகழ்வு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  குணசீலன் சௌந்தரராஜா தலைமையில்  மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றது .

இடம்பெற்ற ஈரோஸ் ஜனநாயக முன்னணி பிரகடன நிகழ்வில் ஈரோஸ் அமைப்பின் முன்னாள் தோழர்கள் கலந்துகொண்டனர் .

இடம்பெற்ற ஈரோஸ் ஜனநாயக முன்னணி பிரகடன நிகழ்வு    இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து சுயேட்சைக் குழுவாக பொதுத் தேர்தலில் பங்கேற்று 13 நாடாளுமன்ற உறுப்பினர்களை வென்றெடுத்த ஈழப்புரட்சி அமைப்பு   வடக்கு கிழக்கு மலையக மக்களின் தற்கால தேவைகளை உணர்ந்து ஈரோஸ் ஜனநாயக முன்னணி எனும் அரசியல் கட்சியாக தன்னை வெளிப்படுத்திக்  கொள்வதாக மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது .

இந்நிகழ்வில்   ஈரோஸ் ஜனநாயக முன்னணி செயலாளர் நாயகம்  இராஜேந்திரா , ஈரோஸ் மத்திய குழு உறுப்பினர்  த . சபாரெத்தினம்  மற்றும் மட்டக்களப்பு  , அம்பாறை  , திருகோணமலை  , வவுனியா  ,யாழ்ப்பாணம் ,முல்லைத்தீவு  ,கிளிநொச்சி , மன்னார்  ,  மலையகம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பிரதிநிதிகள் கலந்து கலந்துகொண்டனர் .







Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624964

Translate