மட்டக்களப்பு - நாவற்குடாவைச் சேர்ந்த பாக்கியராஜா
விஜயகுமார் (வயது 36) என்பவர் கொழும்பு - மருதானையில் கடந்த 2ஆம் திகதி காணாமல்போய் இதுவரை தமக்கு எவ்வித
தகவலும் கிடைக்கவில்லை என காணாமல் போனவரின் மனைவி தெரிவித்துள்ளார்.
மூன்று
பெண் பிள்ளைகளின் தாயான
வி.மங்கையற்சியே இது தொடர்பிலான முறைப்பாடொன்றையும்
வழங்கியுள்ளார் சவூதிக்கு சாரதியாக தொழில் நிமித்தம் சென்ற தமது கணவர் ஜனவரி
மாதம் 14 ஆம் திகதி நாடு திரும்பியதாகவும் தானும் கணவனும் கொழும்பில் மருதானைப்
பகுதியிலுள்ள விடுதியொன்றில் தங்கி இருக்கும் போது முச்சக்கர வண்டியில்
வந்த ஒருவர் கணவனை அழைத்துச் சென்றதாகவும் அதன்பின்னர் தனது கணவன் தொடர்பில்
எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என்றும் மனைவி மங்கையற்கரசி தெரிவித்துள்ளார்.
கைத்தொலைபேசி அழைப்பு விடுக்கப்பட்டும் எவ்வித
தகவலும் கிடைக்காத நிலையில் மருதானை பொலிஸினூடாக காத்தான்குடி பொலிஸில்
மறுநாள் (03.02.2016 இல்) முறைப்பாடொன்றைச் செய்துள்ளதாகவும் இவ்விடயம் தொடர்பில் தனக்கு
எதுவித தகவலும் கிடைக்கவில்லை எனவும் மனைவி மேலும் தெரிவித்துள்ளார்.
எவ்வித வருமானங்களுமின்றி கல்வி கற்கும்
மூன்று பெண் பிள்ளைகளோடு வாழும் எனக்கு என்னுடைய கணவனை கண்டுபிடித்துத் தர
அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டுமென மேலும் அவர் கண்ணீர் உருகி வேண்டுகோள்
விடுத்துள்ளார்
0 facebook-blogger:
கருத்துரையிடுக