வியாழன், 18 பிப்ரவரி, 2016

கல்லடி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நாடெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் இன்று அடையாள கவன ஈர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டனர்.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்லடி விபுலானந்தா அழகியல்கற்கைகள் நிறுவகத்தின் ஊழியர்கள் இன்று பிற்பகல் நிறுவகத்திற்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் நடாத்தப்பட்டது.

கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் பல்வேறு கோரிக்கைகளை வலிறுத்தி நடாத்தப்பட்ட இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் பல்கலைக்கழகத்தின் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

அரசே பல்கலைக்கழக ஓய்வூதியத்தினை மறுபரிசீலனை செய்,ஓய்வூதியம்பெறும் வயதெல்லை சுற்று நிறுபத்தை 60வயது வரை நீடித்துவழங்கு போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓய்வூதியம்பெறும் வயதெல்லை 60ஆக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையிலும் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு 57வயதாகவே இருந்துவருவதாகவும் அவற்றினை 60ஆக அதிகரிக்கவேண்டும் எனவும் இங்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஊழியர் சேமலாப நிதியை வழங்கப்படும் அலவன்ஸில் கழித்துக்கொள்ளவேண்டும் என்பதுடன் பல்கலைக்கழ ஊழியர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு முறையினை மீள்மதிப்பீடுசெய்து வழங்கவேண்டும் எனவும் இங்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.









Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624983

Translate