மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி - குறுமன்வெளியில் மன்னன் வாலசிங்கரின் உருவச்சிலை சீர்பாததேவி பாலர் பாடசாலை அபிவிருத்தி சங்க தலைவர் மா.கருனைரெத்தினம் தலைமையில் கடந்த (31) திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வின் அதிதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் , கிழக்கு மாகாணசபையின் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் , கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர்களான மா.நடராசா, கோ.கருணாகரம்(ஜனா) மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

0 facebook-blogger:
கருத்துரையிடுக