மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் புதிய நிர்வாக உறுப்பினர்கள் இன்று தெரிவு செய்யப்பட்டனர் .
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யும் நிகழ்வும் சங்கத்தின் தலைவர் எந்திரி .ஜி .பிரகாஷ் தலைமையில் கல்லூரி மண்டபத்தில் இன்று இடம்பெற்றது .
இந்நிகழ்வில் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் எந்திரி வை . கோபிநாத் ,உபசெயலாளர் எஸ் . சக்தீஸ்வரன், பொருளாளர் ஆர் . கஜந்தன் , கல்லூரி அதிபர் பி . விமல்ராஜ் , உபதிபர் .ஆர் . பாஸ்கர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் .பழைய மாணவர்கள் கலந்துகொண்டனர் .
இன்று இடம்பெற்ற பொதுகூட்டத்தில் கல்லூரியின் கடந்தகால சங்கத்தின் அபிவிருத்தி செயல்பாடுகள் மற்றும் பழைய மாணவர்களின் கல்லூரிக்கான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது .
இதனை தொடர்ந்து புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்
இதன்போது புதிய நிர்வாக தலைவராக எஸ் .சசிகரன் , செயலாளராக எந்திரி யு . மயூரன், பொருளாளராக ஆர் . கஜாந்தன், உபதலைவராக வைத்தியர் கலைச்செல்வன் , போஷகராக அதிபர் .ஜெ .ஆர் .பி .விமல்ராஜ் மற்றும் 17 நிர்வாக உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர் .
இன்று இடம்பெற்ற மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் மற்றும் புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யும் நிகழ்வில் கல்லூரியின் பழைய மாணவர்கள் , கல்லூரி அதிபர் ,பிரதி அதிபர் ஆகியோர் கலந்துகொண்டனர் .

0 facebook-blogger:
கருத்துரையிடுக