சனி, 27 பிப்ரவரி, 2016

துறைநீலாவணையில் நடமாடும் சேவை


(இ.சுதாகரன்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட துறைநீலாவணை விபுலானந்தா வித்தியாலயத்தில் களுவாஞ்சிகுடி பொலிஸ்நிலையத்தின் ஏற்பாட்டில் இன்று(26.2.2016) சனிக்கிழமை காலை 9.00 மணியளவில் பொலிஸ் பொறுப்பதிகாரி சனத் நந்தலால் தலைமையில் பொலிஸ் நடமாடும் சேவை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம், களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலையின் பணிப்பாளர் கலாநிதி குணசிங்கம் சுகுணன், பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி என்.ரீ.அபூபக்கர், கிராமசேவையாளர்களான வீ.கனகசபை, ஷாம் டினோஜன்,அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், பொதுமக்கள்,பொலிசார் கலந்து கொண்டனர்.

இதன் போது நூறு பேருக்கு இலவச கண் பரிசோதனை செய்யப்பட்டு கண்ணாடியும்,இருபது பேர் இரத்ததானத்தினையும்,இலவச ஆயுள்வேத வைத்தியசேவையையும் இடம்பெற்றது.

அத்துடன் வெளிநாடு செல்வோர்களுக்கான பொலிஸ் பதிவு உட்பட பொலிஸாரின் சேவைகளும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.











Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624982

Translate