புதன், 30 நவம்பர், 2016
ஞாயிறு, 27 நவம்பர், 2016
கிழக்கு மாகாண தமிழர்களின் அபிலாஷைகள் நிறைவேறுமா??
கிழக்கில் மட்டக்களப்பில் தற்போது தமிழர்களின் பூர்வீகக் கிராமங்கள் சிங்களவர்களால் கபளிகரம் செய்யப்பட்டு வருகின்றது என்பது யாவரும் அறிந்த விடயம்தான். இருந்தாலும் இது இன்றைய காலகட்டத்தில் மிகவும் பாரதூரமான பிரச்சினைகளாக சென்றுகொண்டிருக்கின்றது. மட்டக்களப்பின் எல்லைக்கிராமங்களான கெவுளியாமடு, புளுக்குனாவை, கறுவாச்சோலை, மயிலத்தனம் மற்றும் மாதவன்ன போன்ற தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த பிரதேசங்களில் சிங்களவர்கள் அத்துமீறி குடியேறுகின்றனர். விவசாய நிலங்களில் சேளைப்பயிர்செய்கை மற்றும் நெற்பயிர்ச்செய்கை செய்வதாக கூறி இவ்வாறு பெரும்பாண்மை இனத்தவர்கள் குடியேறுகின்றனர்.
வியாழன், 24 நவம்பர், 2016
மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு விநியோகத்திற்கு தயாராக இருந்த நுகர்வுக்கு பொருத்தமற்ற ஒரு தொகுதி உணவுப் பொருட்கள் நீதிமன்ற கட்டளைப்படி அழிப்பு.

மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட களஞ்சியம் ஒன்றிலிருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு விநியோகத்திற்கு தயாராக இருந்த நுகர்வுக்கு பொருத்தமற்ற ஒரு தொகுதி உணவுப் பொருட்கள் நீதிமன்ற கட்டளைப்படி அழிப்பு.
அரிசி - 17000 கிகி
கோவா - 20 கிகி
செ.மிளகாய் - 40 கிகி
கொத்தமல்லி - 26 கிகி
பீற்றூட் - 80 கிகி
மீன் - 200 கிகி
கத்தரிக்காய் - 20 கிகி
பருப்பு - 25 கிகி
இவைகள் கௌரவ நீதவானின் கட்டளைகளைப்படி அழிப்பு.
புதன், 23 நவம்பர், 2016
கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு
கிழக்கு மாகாணத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தலைமையில் இடம்பெற்றதுதிருகோணமலையில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இவருமான பரிசோதகர்கள் மற்றும் ஆய்வு உத்தியோகத்தர்களுக்கான நியமனங்கள் இன்று காலை 10.30 மணியளவில் வழங்கி வைக்கப்பட்டன.இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் ஏ.எல்இஎம் நசீர்இவிவசாய அமைச்சர் கே.துரைராஜசிங்கம் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலப்பத்தி அவர்களுடன் முதலமைச்சின் செயலாளர் யூ.எல் அஸீஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
காசநோய் தொடர்பான மருத்துவமுகாம்
மட்டக்களப்பில் அதிகரித்துவரும் காசநோயினை கட்டுப்படுத்துவதற்காக காசநோய்க்கான சளிப்பரிசோதனை மட்டக்களப்பு மார்புநோய்ச் சிகிச்சை நிலையத்தினால் இன்று(21) பழுகாமம் மத்திய மருந்தகத்தில் இடம்பெற்றது.
இதுதெடார்பாக மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பில் அதிகரித்து வருகின்ற காசநோயினை கட்டுப்படுத்துவதற்கான
களுவாஞ்சிகுடியில் BIMPUTH நடாத்திய இலவச கல்விக்கருத்தரங்கு

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு களுவாஞ்சிகுடி விம் புத் நிதி நிறுவனத்தினாரால்(BIMPUTH FINANCE PLC) இம்முறை க.பொ.த. சா.தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு கடந்த சனிக்கிழமை இலவச கல்விக்கருத்தரங்கு இடம்பெற்றது. இதில் அதிகளவான் மாணவர்கள் கலந்து கொண்டதுடன், இந்நிறுவனத்தினர் மேலும் பல சமூக சேவைகளை செய்வதற்கான திட்டமிடல்களை செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
கலை,கலாசாரகலை மன்றம் ஸ்தாபிக்ப்பட்டது ம.தெ.எ.பற்று பிரதேச செயலகத்தில்
பிரதேசமட்டத்தில் பிரத்தியேககலை,கலாசாரநிகழ்ச்சிதொடர்பானகலைமன்றத்தினை ஸ்தாபிக்கும் கலந்துரையாடல் கூட்டம் நேற்று(22.11.2016) பிரதேசசெயலகமண்டபத்தில்,மண்முனைதென் எருவில் பற்றுபிரதேசசெயலகசெயலாளர் மூ.கோபாலரெத்தினம் தலைமையில் நடைபெற்றது.இதன் அதிபராக நா.நாகேந்திரனும்செ யலாளராக வீ.ஆர்.மகேந்திரனும் உப தலைவராக ச.செல்வப்பிரகாசும், உப செயலாளராக த.தர்மிகாவும் பொருளாளராக பா.மோகனதாஸ் போன்றோர், பிரதேசமட்டகலை,கலாசாரமன்றத்தின் பிரதான நிர்வாகிகளாக தெரிவுசெய்யப்பட்டனர்.
நடனக் கலைக்கூடம், கர்நாடக சங்கீத கலைக்கூடம் ,கூத்துக் கலைக்கூடம், கட்புலக் கலைக்கூடம்,மேலைத்தேய இசைக் கலைக்கூடம், இலக்கியம் மற்றும் நூல் வெளியீட்டுக் கலைக்கூடம், கிராமிய நாடகக்கலைக்கூடம், நவீன நாட்டிய ஆராய்ச்சிக் கலைக்கூடம், பிரத்தியேக கலைகலாசார நிகழ்ச்சி தொடர்பான கலைக்கூடம், தற்காப்புக் கலைக்கூடம், போன்ற வற்றுக்குமான பொறுப்பாளர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.
பிரதேச செயலாளர் மூ.கோபாலரெத்தினம், கலாசார உத்தியோகத்தர் த.பிரபாகரன், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் டிமாலினி நிராஜ்குருஸ் ஆகியோரும் இவ் கலந்துரையாடல் கூட்டித்தில் கலந்து கொண்டனர்.இந் நிகழ்வில் ஆற்றுகைக் கலைஞர்கள் , எழுத்தாளர்கள்,குறுந்திரைப்படக் கலைஞர்கள்,புகைப்படக் கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் போன்றவர்கள் இதன் போது கலந்து கொண்டனர்.
கிழக்கு முதலமைச்சரின் யோசனைக்கு ஜனாதிபதி பாராட்டு
கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் தளபாட பற்றாக்குறை காணப்படுவதினால் அவற்றை நிவர்த்திக்க விசேட நிதி ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கிழக்கு மாகாண முதலமைச்சரின் கோரிக்கைக்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார் நேற்று நண்பகல் 12 மணியளவில் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இந்தக் கூட்டம் ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்றது இதன் போது 9 மாகாணங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களும் பங்கேற்றதுடன் அனைத்து முதலமைச்சர்களும் பங்கேற்ற முதல் கூட்டமாக இது அமைந்திருந்தது
செவ்வாய், 22 நவம்பர், 2016
பிள்ளைகளுக்கான கேள் திறன் தொடர்பான பரிசோதனைகள் இன்று முதல் ஆரம்பம்
(லியோன்)
மட்டக்களப்பு போதனா
வைத்தியசாலையில் பிறக்கின்ற பிள்ளைகளுக்கான கேள் திறன் தொடர்பான பரிசோதனைகள் இன்று
முதல் போதனா வைத்தியசாலையில் ஆரம்பம்
ஏறாவூர் நகர் பிரதேச செயலக பிரிவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள மூன்றாண்டுகளின் அனர்த்தம் அபாய குறைத்தல் செயல் திட்டம் ,
(லியோன்)
ஏறாவூர் நகர் பிரதேச செயலக பிரிவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள
அனர்த்தம் அபாய குறைத்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்று ஏறாவூர்
நகர்
பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது .
திங்கள், 21 நவம்பர், 2016
புனித மிக்கேல் கல்லூரி சிங்கிதி சாரணர் இரண்டாவது படையணி மாணவர்களுக்கு சின்னஞ்சூட்டும் நிகழ்வு
(லியோன்)
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி ஆரம்ப பிரிவு சிங்கிதி சாரணர் மாணவர்களுக்கு சின்னஞ்சூட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது .
ஞாயிறு, 20 நவம்பர், 2016
புனித சிசிலியா பெண்கள் கல்லூரியின் 140 வது ஆண்டு நிறைவு நிகழ்வுகள்
(லியோன்)
மட்டக்களப்பு புனித
சிசிலியா பெண்கள் கல்லூரியின் 140 வது
ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் வகையில் மாபெரும் இரத்ததான நிகழ்வும் மரம் நடுகை
நிகழ்வும் இடம்பெற்றது .
யார் ஆட்சிக்கு வந்தாலும் நான் ஆதரவு வழங்குவேன். பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் சாணக்கியன்
சனி, 19 நவம்பர், 2016
2016 ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு
(லியோன்)
செலான் வங்கியினால் நடத்தப்பட்ட தரம்
ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது .
வெள்ளி, 18 நவம்பர், 2016
அமிர்தகழி மாமாங்கம் பிள்ளையார் ஆலயத்திற்கு சொந்த மான காணியின் வேலி தூண்கள் உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
லியோன்)
மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கம் பிள்ளையார் ஆலயத்திற்கு சொந்த மான காணியின்
கண்ணகியம்மன் ஆலயத்திற்கு முன்னாள் உள்ள காணிப் பகுதியின் பாதுகாப்புக்காக போடப்பட்ட வேலி தூண்கள் சில நபர்களால் உடைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
.
கிழக்குமாகாணத்தில் உள்ள அனைத்து உணவகங்களும் 24 மணித்தியாலங்கள் கண்காணிக்கப்படும் மாகாண பிரதி சுகாதார பணிப்பாளர் அ .லதாகரன் தெரிவிக்கின்றார்
(லியோன்)
கிழக்குமாகாண சுகாதார அமைச்சின் வழிகாட்டலின் கீழ்
மாகாண சுகாதார சேவைகளினால் உணவு பரிசோதனை நடவடிக்கைகள் கிழக்குமாகாணத்தில்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .
சமாதானத்தைக் குழப்புவதற்கு ஏவி விடப்பட்டவரே காவி உடை தரித்த சுமணரத்ன தேரர். பா.உ. ஸ்ரீநேசன்
மட்டக்களப்பினுள் மத குழப்பத்தினை ஏற்படுத்தி வருகின்ற மங்களராம விகாராதிபதி சுமனரத்ன தேரர் சமாதானத்தை குழப்புவதற்கு ஏவி விடப்பட்டுள்ள காவி உடை தரித்தவராக உள்ளார் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். தேரர் தொடர்பாக வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
வியாழன், 17 நவம்பர், 2016
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் முதன்முறையாக புற்றுநோயாளர்களுக்கான சத்திர சிகிச்சை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது (VIDEO & PHOTOS).
(லியோன்)
கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக புற்றுநோயாளர்களுக்கான சத்திர
சிகிச்சை
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள புற்றுநோயாளர்
வைத்தியசாலையில் இன்று வியாழக்கிழமை காலை இந்த சிகிச்சை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
புதன், 16 நவம்பர், 2016
சர்வதேச நீரிழிவு தினத்தினை சிறப்பிக்கும் மாபெரும் விழிப்புணர்வு நிகழ்வு
(லியோன்)
சர்வதேச நீரிழிவு தினத்தினை சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரிகளின் மாபெரும் விழிப்புணர்வு நிகழ்வு இன்று மட்டக்களப்பு நகரில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாநகர எல்லைகுற்பட்ட பிரதான வீதிகள் காபெட் படுத்தப்படவுள்ளன
(லியோன்)
மட்டக்களப்பு மாநகர எல்லைகுற்பட்ட பிரதான வீதிகளுக்கு காபெட் இடப்பட்டு செப்பனிடும்
பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன
அரச அலுவலர்களையும் சிறுபான்மை சமூகங்களையும் இழிவுபடுத்தும் தேரருக்கெதிராக கண்டன கவனயீர்ப்பு போராட்டம்
ஞாயிறு, 13 நவம்பர், 2016
மாவட்ட புகைப்படப் பிடிப்பாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி பட்டறை
(லியோன்)
மட்டக்களப்பு மாவட்ட புகைப்படம் பிடிப்பாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி
பட்டறை மட்டக்களப்பில் நடைபெற்றது .
மட்டக்களப்பு சின்ன உப்போடை லூர்து அன்னை பாலர் பாடசாலை சிறார்களின் ஒளிவிழா நிகழ்வுகள்
(லியோன்)
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குற்பட்ட பாலார் பாடசாலை சிறார்களின்
கிறிஸ்து பிறப்பு ஒளிவிழா நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன .
சனி, 12 நவம்பர், 2016
ஒரு சமுதாயத்துடைய .வளர்ச்சி பொருளாதார அபிவிருத்தியில் மட்டுமாக தங்கி இருப்பதில்லை
(லியோன்)
ஒரு சமுதாயத்துடைய .வளர்ச்சி
என்பது வெறுமனே கட்டுமானங்களிலும் ,பொருளாதார அபிவிருத்தியில் மட்டுமாக தங்கி
இருப்பதில்லை . மாறாக சமுதாயத்துடைய ஆளுமை ,அந்த சமுதாயத்துடைய விருத்தி
மேம்படுவதற்கு மிக முக்கியமாக அமைந்தது கலைகளும் கலை இலக்கியங்களும் என்றால் அது
மிகையில்லை என கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள
மாகாணப் பணிப்பாளர் திருமதி
.சிவப்பிரியா விவரத்தினம் தெரிவித்தார் .
மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் ஐந்தாவது மேய்ப்புப்பணிச்சபை மகாநாடு
(லியோன்)
மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் ஐந்தாவது மேய்ப்புப்பணிச்சபை மகாநாடு
மட்டக்களப்பில் நடைபெற்றது
சித்தாண்டியில் விவசாய விலங்கு உற்பத்திப் பொருட்கள் விற்பனை நிலையம் திறந்துவைப்பு
சித்தாண்டியில் திறந்து வைத்துள்ள விவசாய விலங்கு உற்பத்தி விற்பனை நிலையமானது சிறு விவசாய உற்பத்தியாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்குடனும் விவசாயிகள் மற்றும் விலங்கு பண்ணையாளர்களின் வேண்டுகோளுக்கினங்க குறித்த விவசாய விலங்கு உற்பத்தி விற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது என விவசாய போதனாசிரியர் செ.சுதாகரன் தெரிவித்தார்.
நவீன காலகட்டத்தில் தகவல் தொழிநுட்பம், ஆங்கில கல்வி மிக முக்கியம் - கி.பல்கலைகழக உபவேந்தர்.
இன்றைய நவீன கால கட்டத்தில் தகவல் தொடர்பாடல் கற்கையும் ஆங்கில கல்வியும் கல்வி கற்கும் அனைத்து தரப்பினருக்கும் மிக முக்கியமான தேவைப்பாடக உள்ளது என கிழக்கு பல்கலைகழக உபவேந்தர் ரீ.ஜெயசிங்கம் தெரிவித்தார்.
கிழக்கு பல்கலையின் கலைகலாசார பீடத்திற்குரிய புதிய தகவல் தொடர்பாடல் கூடத்தை இன்று (10) வியாழக்கிழமை திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கிழக்கு பல்கலையின் கலைகலாசார பீடத்திற்குரிய புதிய தகவல் தொடர்பாடல் கூடத்தை இன்று (10) வியாழக்கிழமை திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வெள்ளி, 11 நவம்பர், 2016
மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் முறையாக மூத்த பிரஜைகளுக்கு என்று தனிப்பட்ட ஒரு கட்டிடம்
(லியோன்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் முறையாக மூத்த பிரஜைகளுக்கு என்று
தனிப்பட்ட ஒரு கட்டிடம் கட்டப்படுவது
இதுதான்
முதல் கட்டிடமாகும் என இன்று நடைபெற்ற சிரேஷ்ட
பிரஜைகளுக்கான அலுவலக கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்ட மண்முனை
வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராஜா தெரிவித்தார் .
மட்டக்களப்பு புனித ஜோசெப்வாஸ் வித்தியாலய கிறிஸ்து பிறப்பு விழா
(லியோன்)
மட்டக்களப்பு கல்விவலய பாடசாலைகளில் கிறிஸ்து பிறப்பு விழாவை சிறப்பிக்கும் வகையில்
சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன .