கந்த சஷ்டி விரத்தின் இறுதி நாளான இன்றைய தினத்தில், வரலாற்று புகழ்பெற்ற சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுதர் பேராலயத்தில் சூரன்போர் நிகழ்வானது சனிக்கிழமை (5) பிற்பகல் வேளை ஆலய முன்றலில் இடம்பெற்றது.
நடைபெற்ற சூரன்போர் நிகழ்வில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்ததுடன் ஆலயத்தில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளிலும் ஈடுபட்டிருந்தனர்.
ஆலயத்தில் கந்த சஷ்டி விரதம் கடந்த திங்கள் கிழமை (31.10.2016) ஆரம்பமாகி தொடர்ந்து ஐந்து தினங்கள் திருவிழாக்கள் நடைபெற்று ஆறாம் நாள் ஷண்முக அர்ச்சனையுடன் மறுநாள் ஞாயிற்றுக் கிழமை (06) பாறணைப் பூசையும் அதனைத் தொடர்ந்து மாலை திருக் கல்யாணமும் இடம்பெறவுள்ளது.
இவ்வருடத்திற்கான கந்தசஷ்டி விரதம், சூரன்போர் என்பன மிகவும் சிறப்பான முறையில் ஒழுங்குபடுத்தலுடன் ஆலயத்தின் அரன்காவல் சபையினரால் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக