வெள்ளி, 11 நவம்பர், 2016

மட்டக்களப்பு புனித ஜோசெப்வாஸ் வித்தியாலய கிறிஸ்து பிறப்பு விழா

(லியோன்)

மட்டக்களப்பு  கல்விவலய பாடசாலைகளில்  கிறிஸ்து பிறப்பு விழாவை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன .


இந்நிகழ்வினை  சிறப்பிக்கும் வகையில்  மட்டக்களப்பு தாண்டவன்வெளி புனித ஜோசெப்வாஸ் வித்தியாலயத்தில் அதிபர் சுதாகரன்  தலைமையில் சிறப்பு ஒளிவிழா நிகழ்வுகள்  பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது .

கிறிஸ்து பிறப்பு நிகழ்வினை சிறப்பிக்கும்  வகையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒழுங்கமைப்பில் கிறிஸ்து பிறப்பு  சிறப்பு ஒளிவிழா  நிகழ்வுகள்  மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் நடைபெற்றது

இந்நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மறை மாவட்ட குருமுதல்வர் எ .தேவதாசன் , மட்டக்களப்பு தாண்டவன்வெளி காணிக்கை அன்னை ஆலய பங்கு தந்தை ஏலக்ஸ் ரொபட் , அருட்சகோதரிகள் , மட்டக்களப்பு தாண்டவன்வெளி காணிக்கை மாதா ஆலய வின்சன்ட் டி போல் சபை உறுப்பினர்  ஜே .எச் . ரட்ணராஜா ,பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் , பாடசாலை பழைய மாணவர்கள் ,பாடசாலை  அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் , பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர் .  













Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624965

Translate