ஐயப்பர் சபரி மலைக்கு அனைவித பெண்களையும் அனுமதிக்க தயார் என்ற கேரளா உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கும் தகவல் செல்லோரையும் வேதனைக்கும் சிந்தனைக்கும் உள்ளாகியிருக்கின்றது என என சர்வதேச இந்துமத குருபீடாதிபதி சபரிமலைக் குருமுதல்வர் சிவாகம கலாநிதி ஆன்மீக அருள்ஜோதி ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார் (J.P) தெரிவித்துள்ளார்.குறித்த விடயம் தொடர்பாக இன்றைய தினம் லங்காசிறி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரித்தார்.அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்.
விரத அனுஸ்டானங்கள் , மத வழிபாடுகள், கலாசார விழுமியங்களிலே கைவைக்கின்ற உரிமை எந்த அரசுக்கும் கிடையாது.தனியொருவரின் கடமைகளில் அரசு, நீதிமன்றம் தலையிடலாம், சட்டங்களை வகுக்கலாம். தவிர மத வழிபாடுகளில், கலாசாரங்களில், எங்களின், கோட்பாடுகளில், கலாசார விழுமியங்களில், பாரம்பரியங்களில், முன்னோர்களினால் காலம் காலமாக காத்து வந்த இந்த சமய நிகழ்வுகளிலே அரசு எந்த விதமான அதிகாரத்தைப் பயன்படுத்தியும் சட்டம் போடமுடியாது.
அது எந்த வித்தில் கேரளா அரசு நீதிமன்றம் இந்த முடிவெடுத்திரக்கின்றதோ தெரியது. அது தவரான கருத்து. அதற்கு தண்டனை நிச்சயமாக ஐயப்பானால் கிடைக்கும் மீண்டும் அதற்குரிய ஒழுங்கான பதிலை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது.
இது பொதுவாக இறைவனை வழிபடுவதற்கு ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லை என்பதை எவரும் மறுக்கமுடியாது.உலகில் அனைத்தும் சரிபரியாக இருக்கின்றது இருக்கவேண்டும். ஆணும் பெண்ணும் சமம் என்று உணர்த்துவதே இறைவனின் அர்த்தனாதீஸ்வரர் வடிவமாகும்.
ஆண் பெண் பாகுவபாடு என்பது இறை வணக்கத்துக்கு இல்லை என்பது ஒருபுறம்.
ஆனால் ஐயப்பனுடைய விரதம் வழிபாடுகள், நியமனங்கள் என்பது ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்ககூடியது.
வேறு எல்லா ஆலயங்களுக்கும் வேறு எவரும் சென்று வழிபடலாம், அங்கு ஆண் பெண் என்கின்ற வேறுபாடு இல்லை. ஒரு பிரமச்சாரியம் விரத்தை மேற்கொண்டு செய்யப்படுகின்றதாகிய ஒரு புனித யாத்திரையாக ஐயப்பர் சபரிமலை யாத்திரை அமைகின்றது.
குறித்த யாத்திரைக்கு செல்வதற்கு 10 வயதுக்கு உட்ப்பட்ட சிறு பிள்ளைகளும். 50 வயதுக்கு மேல் இயற்கையின் உபாதைக்குள் இருந்து விடுபடுகின்ற பெண்களும் செல்லாம் என்பது. இன்று நேற்று அல்ல சபரிமலை யாத்திரை ஆரம்பத்தில் இருந்து வருகின்ற ஒரு ஐயதீகமாக இருந்துவருகின்றது.
இதனை நாம் தேவையில்லாமல் குழப்பிக்கொள்வதோ, நம் பாரம்பரியத்தை ஐதீகங்களை கலாசாரத்தை நாம் சீரழிக்ககூடாது.
48 நாட்கள் மண்டலம் இருந்து செல்கின்ற முறை இளம் வயது பெண்களுக்கு இல்லை இயற்கையில் உபாதைகள் என்பதை மனதில் கொண்டுதான் முன்னோர்கள் செய்திருக்கின்றார்கள், அதை விடுத்து பெண்கள் ஐயப்பனை வழிபடக்கூடாது என்பதுற்காக அல்ல.
ஐயப்பனை பெண்கள் தரிசிப்பதில் அல்லது யாத்திரை செய்வதென்பது பெரும் சிரமத்தை கருத்தில் கொண்டுதான் முன்னோர்கள் இத்தகைய முடிவெவை எடுத்திருக்கின்றார்கள். இவ்வாறு பல கட்டுப்பாடுளுடன் உள்ளக்கியதாக அமைத்தது ஐயப்பர் விரதம் என தெரிவித்தார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக