மட்டக்களப்பில் அதிகரித்துவரும் காசநோயினை கட்டுப்படுத்துவதற்காக காசநோய்க்கான சளிப்பரிசோதனை மட்டக்களப்பு மார்புநோய்ச் சிகிச்சை நிலையத்தினால் இன்று(21) பழுகாமம் மத்திய மருந்தகத்தில் இடம்பெற்றது.
இதுதெடார்பாக மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பில் அதிகரித்து வருகின்ற காசநோயினை கட்டுப்படுத்துவதற்கான
சளிப்பரிசோதனை அனைத்துப்பிரதேசங்களிலும் இடம்பெற்று அதில் இருந்து காசநோயுள்ள நோயாளியினை கண்டறிந்து அவர்களுக்கான சிகிச்சை நடைபெற்று வருகின்றது. இதன்பிரகாரம் அத்தகைய மருத்துவமுகாம் இன்று பழுகாமத்தில் இடம்பெற்றது. இதன்போது சளிதொடர்பான நோயுடையவர்களிமிருந்து சளி மாதரிகள் பெறப்பட்டு மேலதிக பரிசோதனைக்காக கொண்டுசெல்லப்பட்டன. இம்மருத்துவமுகாமில், பொதுச்சுகாதார பரிசோதகர்களான நா.நரேந்திரகுமார், சி.சிவசுதன் மற்றும் மருந்துக்கலவை உத்தியோகஸ்தர் வீ.மா.சரவணபவான் கலந்துகொண்டனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக