பிரதேசமட்டத்தில் பிரத்தியேககலை,கலாசாரநிகழ்ச்சிதொடர்பானகலைமன்றத்தினை ஸ்தாபிக்கும் கலந்துரையாடல் கூட்டம் நேற்று(22.11.2016) பிரதேசசெயலகமண்டபத்தில்,மண்முனைதென் எருவில் பற்றுபிரதேசசெயலகசெயலாளர் மூ.கோபாலரெத்தினம் தலைமையில் நடைபெற்றது.இதன் அதிபராக நா.நாகேந்திரனும்செ யலாளராக வீ.ஆர்.மகேந்திரனும் உப தலைவராக ச.செல்வப்பிரகாசும், உப செயலாளராக த.தர்மிகாவும் பொருளாளராக பா.மோகனதாஸ் போன்றோர், பிரதேசமட்டகலை,கலாசாரமன்றத்தின் பிரதான நிர்வாகிகளாக தெரிவுசெய்யப்பட்டனர்.
நடனக் கலைக்கூடம், கர்நாடக சங்கீத கலைக்கூடம் ,கூத்துக் கலைக்கூடம், கட்புலக் கலைக்கூடம்,மேலைத்தேய இசைக் கலைக்கூடம், இலக்கியம் மற்றும் நூல் வெளியீட்டுக் கலைக்கூடம், கிராமிய நாடகக்கலைக்கூடம், நவீன நாட்டிய ஆராய்ச்சிக் கலைக்கூடம், பிரத்தியேக கலைகலாசார நிகழ்ச்சி தொடர்பான கலைக்கூடம், தற்காப்புக் கலைக்கூடம், போன்ற வற்றுக்குமான பொறுப்பாளர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.
பிரதேச செயலாளர் மூ.கோபாலரெத்தினம், கலாசார உத்தியோகத்தர் த.பிரபாகரன், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் டிமாலினி நிராஜ்குருஸ் ஆகியோரும் இவ் கலந்துரையாடல் கூட்டித்தில் கலந்து கொண்டனர்.இந் நிகழ்வில் ஆற்றுகைக் கலைஞர்கள் , எழுத்தாளர்கள்,குறுந்திரைப்படக் கலைஞர்கள்,புகைப்படக் கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் போன்றவர்கள் இதன் போது கலந்து கொண்டனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக