வெள்ளி, 18 நவம்பர், 2016

சமாதானத்தைக் குழப்புவதற்கு ஏவி விடப்பட்டவரே காவி உடை தரித்த சுமணரத்ன தேரர். பா.உ. ஸ்ரீநேசன்

(பழுகாமம் நிருபர்)
மட்டக்களப்பினுள் மத குழப்பத்தினை ஏற்படுத்தி வருகின்ற மங்களராம விகாராதிபதி சுமனரத்ன தேரர் சமாதானத்தை குழப்புவதற்கு ஏவி விடப்பட்டுள்ள காவி உடை தரித்தவராக உள்ளார் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். தேரர் தொடர்பாக வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,


சமாதானத்தை குழப்புவதற்கு ஏவி விடப்பட்டுள்ள காவி உடை தரித்தவராக உள்ளார். சுமனரத்ண தேரர்  வெறித்தனம் கொண்டு செயற்படுவதால் நாமும் அவரை போன்று செயற்பட முடியாது. அவருடன் சென்று நிதானமாக பேச முடியாத நிலையும் உள்ளது. காரணம் அவருடன் பேச முற்படுகின்றபோது அவர் கைகலப்பினை ஏற்படுத்துவதற்கு முற்படுகின்றார். ஆகவே இதனை அவர்கள் சாதமாக பயன்படுத்தி தமிழ் சிங்கள மக்களிடையே மீண்டும் பிரச்சினையை கொண்டு வருவதற்கு முயற்சிக்கின்றார்கள்.  அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மட்டக்களப்பிற்கு விஜயம் செய்தபோது பலத்த வரவேற்பளித்து அழைக்கப்பட்டார். அதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தனது விகாரைக்குள் செல்லாதமையின் காரணமாக நினைவுப்படிகத்தினை உடைத்தெறிந்தவர். 

எதிர்வரும்  நவம்பர் 19ம் திகதி அரசினால் இடைக்கால அறிக்கை ஒன்றினை வெளியிடப்பட உள்ளது. இதனை குழப்புகின்ற செயற்பாட்டினை முன்னைய ஆட்சியாளர்கள் பல வழிகளிலும் முயற்சித்து வருகின்றார்கள். அதில் ஒருவராகவேதான் இவரை பார்க்கவேண்டி உள்ளது. இவரை தமிழர்கள் தாக்கவேண்டும் என்கின்ற நிலையில் வியூகங்கள் உள்ளதா என்பதும் சந்தேகமாக உள்ளது. இதற்கு சாதகமாக அமைச்சர் ஒருவரும் செயற்பட்டுவருவதும் குறிப்பிடத்தக்கதொன்றாகும். அண்மையிலே அம்பாரை மாயக்கல்லி மலையில் புதிதாக முளைத்த புத்தர் சிலையினை அகற்றினால் நான் பதவி துறப்பேன் என்றும், எத்தனை புத்தர் சிலைகள் வைக்கப்படுகின்றதோ அத்தனைக்கும் நான் மானியம் வழங்குவேன் என்று கூறியுள்ளார். பழைய ஆட்சியாளர்கள் மட்டுமல்ல தற்போதைய ஆட்சியாளர்களும் இதற்கு உடந்தையாக உள்ளதாகவும் இதில் எமது அவசரப்படும் அரசியல் வாதிகள் நிதானமாக செயற்பட  வேண்டும் எனவும் தெரிவித்தார்.   

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624984

Translate