(லியோன்)
மதுபாவனையில் மட்டக்களப்பு மாவட்ட மூன்றாவது இடத்திற்கு
தள்ளப்பட்டிருந்தாலும் மது பாவனையில்
குறைந்ததாக இல்லை முன்னைய நிலையை விட தற்போது மதுபாவனை அதிகரித்துகொண்டு இருப்பதாக
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா தெரிவிக்கின்றார்
மதுபாவனையை கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது . இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்
மட்டக்களப்பு மண்முனை
வடக்கு பிரதேச செயலகத்தின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தின் 2016
ஆம் ஆண்டிக்கான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் மட்டக்களப்பு
பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேனவின் செயற்திட்டத்திற்கு அமைவாக மதுபாவனையை கட்டுப்படுத்துவதற்கான
விழிப்புணர்வு கருத்தரங்கு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில்
நடைபெற்றது .
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராஜா தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு
நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர்
கணேசராஜா கலந்துகொண்டார்
இந்நிகழ்வில் பிரதம
அதிதியாக கலந்துகொண்ட உரையாற்றிய மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி தெரிவிக்கையில்
இந்த நிகழ்வானது முக்கியமான நிகழ்வாக இந்த பிரதேசத்தில் மற்றுமல்லாது இந்த
நாட்டில் எல்லா பிரதேசங்களிலும் நடைபெற்று வருகின்றது .
யுத்தத்தின் பின் போதைவஸ்து பாவனை , மதுபாவனை அதிகரித்து செல்வதாக
புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன .
ஜனாதிபதியின் ஏற்பாட்டின் கீழ் இதனை நடத்துவதற்கு உத்தேசித்து அனைத்து
பிரதேச செயலகங்களிலும் இவ்வாறான விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்துவதற்கு
தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
இவ்வாறு இந்த விழிப்புணர்வு நிகழ்வு பிரதேச செயலக மட்டத்தில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளமை
இது தேசிய பிரச்சினையாக உருவாக்கி
இருக்கின்றது என்பதற்கு இது சான்றாக உள்ளது .
இந்த மது பாவனையால் குடும்பங்களில் பல பிரச்சினைகள் இடம்பெறுகின்றது , இவ்வாறாக குடும்ப பிரச்சினைகள் மூலம் நீதி மன்றத்துக்கு
வருகின்ற பொழுது நீதிமன்றில் தண்டனையை மற்றும் மையமாக கொண்டு சட்ட புத்தகங்களில்
உள்ள சட்ட விடயங்களை வைத்துகொண்டு தண்டனைகளை வழங்குகின்றோம் .
ஆனால் அது மாத்திரம் போதாது, படித்தவர்களை கொண்டு இவ்வாறான விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு
இவர்கள் மூலம் தமது பிரதேசங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு இந்த
விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றது .
இலங்கையில் மதுபாவனையில் மட்டக்களப்பு மாவட்ட மூன்றாவது இடத்திற்கு
தள்ளப்பட்டிருந்தாலும் மது பாவனையில்
குறைந்ததாக இல்லை முன்னைய நிலையை விட தற்போது மதுபாவனை அதிகரித்துகொண்டு தான்
இருக்கிறது .
எனவே இதனை கட்டுபடுத்துவதற்கு சட்ட திட்டங்களினால் மாத்திரம் முடியாது
என்பதை நீதிமன்றத்துக்கு வருகின்ற வழக்குகள் மூலம் அறிய முடிகின்றது .
குறிப்பாக இந்த மாவட்டத்திலே மூன்று முக்கிய விடயங்கள் அதிகரித்து
காணப்படுகின்றது .
ஒன்று குடும்ப வன்முறை , இரண்டு விவாகரத்து ,மூன்றாவது பராமரிப்பு
வழக்குகள். இவ்வாறான வழக்குகள் நீதிமன்றுக்கு வருகின்ற போது முக்கிய
சாட்சியங்களாக மதுபோதையில் இடம்பெற்ற சம்பவங்களாக சாட்சியங்கள் பதியப்படுகின்றது .
இவ்வாறு சாட்சியங்கள் நீதிமன்றில் பதியப்பட போதிலும் அதனை தீவிரமாக ஆராயப்படுகின்ற
நிலை இருந்தாலும் நீதிமன்றில் இருக்கின்ற வழக்குகளின் அளவுகள் , தரப்படுகின்ற
நேரகாலத்தை பொறுத்து ஒவ்வொரு வழக்குகளுக்கும் தனிப்பட்ட ரீதியில் கவணத்தை செலுத்த
முடியாத நிலை ஏற்படுகின்றது .
எனவே இவ்வாறன விடயங்களை சமுதாய சீர்திருத்த பிரிவு ,விமோச்சனா போன்ற
அமைப்புகள் மூலம் இவற்றுக்கான நல்ல
விளைவுகளும் பெறக்கூடியதாக இருக்கின்றது .
ஆகவே இவ்வாறான வளங்களை பயன்படுத்தி இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்வுகள்
மூலம் சமூகத்திற்கு நல்ல விழிப்புணர்வுகளை கொண்டு செல்ல வேண்டும் என
தெரிவித்துக்கொண்டார் .
மதுபாவனையை
கட்டுப்படுத்துவதற்காக மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட இளைஞர் ,யுவதிகளுக்காக
நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு நிகழ்வில் வளவாளராக வாழைச்சேனை வைத்தியசாலை உளநல
மருத்துவ வைத்தியர் ஜூட் ரமேஷ் ,மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி
திட்டமிடல் பணிப்பாளர் ஆர் .ஜதிஸ்குமார் ,உதவி பிரதேச செயலாளர் எஸ் .யோகராஜா ,
பிரதேச செயலக கணக்காளர் கே .ஜெகதிஸ் வரன் ,மண்முனை வடக்கு பிரதேச செயலக சமுதாய சார் சீர்
திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , சமுதாய சார் சீர்திருத்த திணைக்கள
உத்தியோகத்தர்கள் ,பிரதேச செயலக அலுவலக உத்தியோகத்தர்கள் , மண்முனை வடக்கு பிரதேச
செயலக பிரிவுக்குற்பட்ட இளைஞர் ,யுவதிகள் ஆகியோர்
கலந்துகொண்டனர் .
0 facebook-blogger:
கருத்துரையிடுக