வெள்ளி, 4 நவம்பர், 2016

பாலியல் துஸ்பிரயோகங்கள் , பாலியல் துன்புறுத்தல்கள் போன்ற வழக்குகளுக்கு எதிரா சட்டநடவடிக்கை

(லியோன்)

சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் பெறப்படாதிருந்த நான்கு வழக்குகளுக்கு எதிரா சட்டநடவடிக்கை எடுக்க சட்டமா அதிபர் திணைக்களம் அனுமதி


2010ஆம் ஆண்டிலிருந்து  சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் பெறப்படாதிருந்த நான்கு வழக்குகள்  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி  மாணிக்கவாசகர் கணேசராஜா மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்  காரணமாக   நான்கு  வழக்குகளுக்கான அறிவுறுத்தல்கள் சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளன .


இதன் காரணமாக  பாலியல் துஸ்பிரயோகங்கள் , கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல்கள்  போன்ற  நான்கு வழக்குகளுடன்  தொடர்புடையதான குற்றவாளிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய குறித்த நான்கு வழக்குகளுக்கும் சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ள மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற  நீதிபதி  மாணிக்கவாசகர் கணேசராஜா உத்தரவு பிறப்பித்துள்ளார் .
Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624977

Translate