சனி, 5 நவம்பர், 2016

கஞ்சா விற்பனையில் ஈடுபடும் பெரும்புள்ளிகளை கண்டறிவதற்கு நீதவான் பணிப்புரை

(லியோன்)

மட்டக்களப்பு பொலிசாரினால் கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்ட காத்தான்குடி பகுதியை சேர்ந்த  நபர் பிணையில் விடுதலை .


மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட  பகுதியில் மட்டக்களப்பு பொலிசாரினால்  காத்தான்குடி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்டு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா  முன்னிலையில் (04) வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டுள்ளார் .

நீதவான்  முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு  விசாரணைக்கு எடுத்து கொண்ட போது குற்றவாளி குற்றத்தை ஒப்புக்கொண்டதன் காரணமாக  குற்றவாளிக்கு எதிராக 20,000ரூபா சரீர பிணையில் விடுதலை செய்ய நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா உத்தரவு பிறப்பித்துள்ளார் .


குறித்த குற்றவாளியால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய குற்றவாளி எதிர் வரும் 29.11.2016 நீதிமன்றில் ஆஜராகுமாறும் ,வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய கஞ்சா விற்பனை முகவரை நீதி மன்றில் ஆஜர்படுத்த பொலிசாருக்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளதுடன்  , கஞ்சா விற்பனையில் ஈடுபடும் பெரும்புள்ளிகளை விசாரணைகள் மூலம் கண்டறிவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா  பொலிசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் .
Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624983

Translate