சனி, 18 பிப்ரவரி, 2017

மட்டு. இந்து இளைஞர் பேரவையின் சிவராத்திரி நிகழ்வு தேற்றாத்தீவில்


மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் சிவராத்திரி நிகழ்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை(24.02.2017) அன்று தேற்றாத்தீவிலுள்ள கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தலைமையில் இடம் பெறவுள்ளது.



சிவராத்திரி விரத்தினை சிறப்பிக்கும் வகையில் இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களிடையே பல தரப்பட்ட போட்டிகளும் கலை நிகழ்வுகளும் இடம் பெற இருப்பதுடன் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்க்கு பரிசுகளும் வளங்கவுள்ளனர்.மேலும் அடியார்களிடையே இந்து சமய இதிகாச,புரணங்கிடையே வினாக்கள் வினவப்பட்டு வெற்றி பெறுபவர்களுக்கு பணப்பரிசும் வழங்கப்படவுள்ளன.

மேலும் கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்திற்கு சித்தர்களால் நர்மதா நதிக்கரையில் இருந்து கொண்டுவரப்பட்ட பிரதிஸ்டை பண்ணப்பட்டிருக்கும் உயிர் லிங்கத்திற்கு அடியார்கள் ஆலய புனித கங்கையாகிய 'பால புஸ்கரணி' தீர்த்தக்கங்கையில் தீர்த்த நீர் எடுத்துவந்து தங்கள் கைகளினால் அபிஷேகம் பண்ணும் சிறப்பு நிகழ்வு காலை தொடக்கம் பின்னிரவு வரை இடம் பெறும்.


ஆலயத்தில் நான்கு சாமப் பூஜைகளும் இடம் பெறும்.மாலை 6 மணி தொடக்கம் அதிகாலை வரை பஜனை, சங்கீதக்கச்சரி, நடனம், கதாப்பிரசங்கம், சமய பேருரைகள் போன்றவும் இடம் பெறும். என ஆலய பரிபான சபையின் தலைவர் .விமலானந்தராஜா தெரிவித்தார்

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624982

Translate