யுத்தம் ஓய்ந்து விட்டது வடகிழக்கு சந்திப்புகளை நடத்துவதற்கு தற்பொழுது பாதைகள் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் வடக்குக்கும் கிழக்க்குக்கும் உள்ள இணைப்பை மீண்டும் மேன்படுத்தி அதன்மூலம் ஒருவரின் ஆற்றலை மற்றொருவர் பயன்படுத்த வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட மேலதிக நீதிபதி மற்றும் நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான மாணிக்கவாசகர் கணேசராஜா தெரிவித்தார்.
மட்டக்களப்பு மயிலம்பாவவெளி கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் மா.விஸ்வநாதன் தலைமையில் நேற்று (27) பிற்கநடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டபோதே மேற்கண்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்துதெரிவிக்கும்போது
வடக்கு முன்னைய காலங்களில் கல்வியில் உயர்ந்திருததைப் போன்று மீண்டும் கல்வியூடாக சமூகத்தை மேன்படுத்த வேண்டுமென்ற தூர நோக்குச் சிந்தனையுடன் கல்வியலாளர்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.அதேபோன்று கிழக்கு மாகாணமும் கல்வியைக் கைவிடாது, வேறு எந்தவொரு சண்டித்தனங்கள் அல்லது ரவுடித்தனங்களிலோ ஈடுபடாமல் கல்வியை முன்னோக்கிக் கொண்டு செல்லவேண்டும்.
யுத்தம் ஓய்ந்துவிட்டது, கல்விக்குரிய ஆற்றல்களை கல்விக்க செலவழித்தால் வடக்கும் கிழக்கும் இணைந்து சிறந்ததொரு உண்ணதமான தமிழ் சமூதாயத்தைக் கொண்ட பெரு நிலமாக உருவாகுவதற்கு வழிபிறக்கும்.எங்களுடைய சந்திப்புகளை நடத்துவதற்கு தற்பொழுது பாதைகள் திறந்து விடப்பட்டுள்ளது. வடக்குக்கும் கிழக்க்குக்கும் உள்ள இணைப்பை மீண்டும் மேன்படுத்தி அதன்மூலம் ஒருவரின் ஆற்றலை மற்றொருவர் பயன்படுத்த வேண்டும்.
வடக்கில் உள்ள ஆற்றல்களை கிழக்கு மாகாணம் அதனைப் பயன்படுத்த முயற்சி எடுக்கவேண்டும். அதேவேளை வடக்கிலுள்ளவர்கள் கிழக்கிலுள்ள மிகச் சிறந்த மூல வழங்களையும் ஆற்றல்களையும் எவ்வாறு பயன்படுத்தலாம் என சிந்திக்கவேண்டும். வடக்கும் கிழக்கும் இணைந்து செயலாற்றினால் சிறந்ததொரு தமிழ் சமூகத்தை நாங்கள் உருவாக்க முடியும். அத்தகையதொரு தலைமைத்துவம் உருவாக வேண்டுமானால் ஒரேயொரு வழியாக கல்வி மட்டுமே உள்ளது.
கல்வியில் உயரவேண்டுமாக இருந்தால் கிழக்கு மாகாணம் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டம் கல்வியில் சிறந்து விளங்க வேண்டுதோடு, கல்விச் சமூகத்தை உருவாக்க மாவட்டத்திலுள்ள அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் என தெரிவித்தார்.
நுண் கடன் தொடர்பான பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகின்றது.
நுண் கடன் தொடர்பாக சமூகத்தின் மத்தியில் எழும் பிரச்சினைக்குரிய விடயத்தைக் கருத்தில் கொண்டு பல்வேறு மட்டங்களில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டது.
அதன் மூலம் நுண் கடன் தொடர்பாக எழும் பிரச்சினையை தீர்ப்பதற்கான சட்ட நடவடிக்கை மற்றும் பாதுகாப்புக்கள் தொடர்பான விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டது.நுண் கடன் வழங்குவர்களுக்கும் பெறுவர்களுக்கும் பல்வேறுபட்ட விழிப்புணர்வுகள் மற்றும் சட்ட ஆலோசனைகளும் வழங்கியபோதும் பிரச்சினைகள் அதிகரித்த வண்ணமுள்ளது.
நுண் கடன் பிரச்சினையினால் நாளுக்கு நாள் இளம் குடும்பம் தொடக்கம் பெரியவர்கள் வரை தற்கொலைக்கு செல்கின்றதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.நாங்கள் வழங்கிய சட்ட நட்டவடிக்கை மற்றும் விழிப்புணர்வு தொடர்பாக சமூகத்தின் மத்தியில் சென்றடையவில்லையோ என்ற எண்ணம் என்னிடம் மேலோங்கியிருந்தது.
வடக்கில் போதை வஸ்த்து மற்றும் மதுபாவனை அதிகரித்துக் கொண்டு செல்கின்றது. அதன்மூலம் குடும்பம் உட்பட குடும்பத்திலுள்ள சிறு பிள்ளைகளின் வாழ்க்கை மற்றும் அவர்களின் கல்வி சீரழிந்து கொண்டுடிருக்கின்றது.மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அவிருத்திக்கு வழங்கப்படும் தொகையை விட மாவட்டத்தில் மதுபாவனைக்கு செலவழிக்கப்படும் தொகை அதிகரித்த வண்ணமுள்ளதை அண்மைக் கால புள்ளி விபரங்களில் அறிக்கூடியதாகவுள்ளது.
கல்வி நிலையில் உயர்ந்த இடத்தில் இருக்கின்றதான யாழில் கடந்த காலங்களில் இருந்து போதை வஸ்த்து, வால் வெட்டு, மது பாவனை போன்றவற்றினால் சீரழிந்து கொண்டு செல்வதை பார்க்கும்போது மன வேதனையடைகின்றோம்.நான் யாழ் மாவட்டத்தில் நீதிபதியாக இருந்த காலத்தில் குற்றச் செயல்களுக்கு கடுமையாக பாடுபடவேண்டியிருந்தது.
தற்போழுது மேல் நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் நீதிபதி இளஞ்செழியன் குறித்த குற்றச் செயல்களுக்குரிய சட்ட வழிமுறைகளை கையாண்டும்கூட யாழில் நடக்கும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த அல்லது அதனை நல்வழிக்கு கொண்டுவருவதற்கு சிறிது கஸ்டமாக இருப்பதை ஊடகங்கள் வாயிழாக நீங்கள் அறியக்கூடியதாக இருக்கும்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக