சனி, 25 பிப்ரவரி, 2017

வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றிய சித்தாண்டி வானவில் விளையாட்டு அணி

மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை - கஜமுகன் கழகத்தினால் நடாத்தப்பட்ட 2017ம் ஆண்டுக்கான சசிந்திரன் ஞாபகார்த்த கிண்ண கிரிக்கற் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் நேற்று (24) முறக்கொட்டான்சேனை கஜமுகா விளையாட்டுத் திடலில் சித்தாண்டி வானவில் விளையாட்டு அணி வெற்றி பெற்று கிண்ணத்தை கைபப்ற்றியது.குறித்த ஞாபகார்த்த கிண்ண கிரிகற் சுற்றுப் போட்டியில் அணிகள் தெரிவு செய்யப்பட்டு அணிகளுக்கிடையிலான சுற்றுப் போட்டிகள் நடைபெற்றது. இதன்போது சித்தாண்டி வானவில் கிறிக்கற் அணி நீலத்தாரகை இரண்டு அணிகளும் இறுதிச் சுற்றுக்கு தெரிவாகிய நிலையில் போட்டிகள் பலத்த பலப்பரீட்சைக்கு மத்தியில் நடைபெற்றது.


இறுதிச் சுற்று ஆரம்ப விழலாவில் அதிதிகள் அழைக்கப்பட்டதும் நடுவர்களினால் போட்டிகளுக்கான நாணய சுழற்சி இடம் பெற்றதில் நீலத்தாரகை அணியினர் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தனர்.நீலத்தாரகை அணியினர் 19.5 ஓவர்கள் முடிவில் சகல விக்கற்டுக்களையும் இழந்து 111 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

பதிலுக்க துடுப்பெடுத்து ஆடிய வானவில் விளையாட்டுக் கழத்தின் கே.நவநிதன் தலைமையிலான அணியினர் 16 ஓவர்களுக்குள் 144 ஓட்டங்களைப் பெற்று சசிந்திரன் ஞாபகார்த்த கிண்ண கிரிக்கற் கிண்ணத்தை வெற்றிபெற்றனர்.கடந்த காலங்களில் இருந்து சித்தாண்டி வானவில் விளையாட்டுக் கழகமானது பிரதேச மற்றும் மாவட்ட மட்டங்களில் நடைபெறும் கிரிகற் மற்றும் ஏனைய விளையாட்டு சார்ந்த போட்களில் கலந்துகொண்டு பல்வேறுபட் சாதனைகளை கழகத்திற்கும் சித்தாண்டி பிரதேசத்திற்கும் பெற்றுக் கொடுதிருக்கின்றர்கள் என சித்தாண்டி வானவில் விளையாட்டுக் கழகத்தின் கிரிகற் அணித் தலைவர் கே.நவநிதன் தெரிவித்தார்.





Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624977

Translate