திங்கள், 13 பிப்ரவரி, 2017

'நீங்கள் கூறுவது ஒருவருடைய மூளையினைச் சென்றடைய வேண்டுமாயின் உங்கள் மொழியில் கூறுங்கள் ஆனால் அவருடைய இதயத்தினைத் தொடவேண்டுமாயின் குறித்த நபருடைய தாய்மொழியில் பேசுங்கள்' உதவிப்பணிப்பாளர் கணேசமூர்த்தி கோபிநா

தேசிய சகவாழ்வு மற்றும் கலந்துரையாடல் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட  மொழிப்பயிற்சி வகுப்புகளிற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த திங்கட்கிழமை(06.02.2016) அன்று கொக்கட்டிச்சோலை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. 


நிகழ்வில் பிரதம விருந்தினராக தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் உதவிப் பணிப்பாளர் கணேசமூர்த்தி கோபிநாத் கலந்துகொண்டிருந்தார். அதிதிகளாக பட்டிப்பளை பிரதேச செயலாளர் .தட்சணகௌரி தினேஸ், கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதம குரு, பட்டிப்பளை பிரதேச செயலக செயலாளர் மற்றும்  பெற்றோர்கள், பயிற்சியின் மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். 12 நாள் நடைபெற்ற சிங்கள மொழிப்பயிற்சியினை பூர்த்தி செய்திருந்த 90 இளைஞர், யுவதிகளுக்கு நிறுவனத்தினால் சான்றிதழ் வழங்கிவைக்கப்பட்டிருந்தது. நிகழ்வில் மாணவர்களால் சகோதர கலாச்சாரத்தினை பிரதிபலிக்கும் பல கலை நிகழ்வுகளும் நிகழ்த்தப்பட்டிருந்தது.

'இன்றைய இளைஞர், யுவதிகளின் முன்னேற்றத்திற்கு மொழி மிக முக்கியமானதாக காணப்படுகின்றது. தமிழினைத் தாய்மொழியாக கொண்ட நாம் எமது சகோதர மொழியான சிங்கள மொழியினையும், சிங்கள மொழியினைத் தாய்மொழியாக கொண்டவர்கள் தமிழ் மொழியினையும் பயின்று கொண்டால் அனைவருக்கும் இடையில் தொடர்பாடல் மேன்மையுற்று இருபாலாருக்கும் இடையிலான ககோதரத்துவம் மேன்மையுற மிக முக்கியமான காரணியாக அமையும். கிழக்கில் வசிப்பவர்கள் தெற்கிற்கு பல தேவைகளை நிறைவேற்ற செல்ல வேண்டிய தேவை அனைவருக்கும் காணப்படுகின்றது. அங்கு சிங்கள மொழியினை பாவிக்க வேண்டிய தேவை அதிகம் காணப்படுகின்றது. தேசிய சகவாழ்வு மற்றும் கலந்துரையாடல் அமைச்சின் மூலம் நாடு பூராகவும் மும்மொழிப் பயிற்சிகள் இடம்பெற்று வருகின்றது. இப்பயிற்சிகளிற்கான பொறுப்பான அதிகாரியாக நான் விளங்குவதன் காரணமாக எமது பிரதேசங்களில் மொழிப்பயிற்சி வகுப்புக்களை அதிகளவு நடாத்துவதற்கு ஏற்பாடுகளை செய்யக்கூடியவாறு இருக்கின்றது. 

இங்கு இடம்பெற்ற இப்பயிற்சி நெறியில் கலந்து கொண்ட 90 பங்குபற்றுனர்களும் சிறப்பாக பயிற்சியினைப் பூர்த்திசெய்துள்ளீர்கள் என்பதனை தங்களால் இங்கு நிகழ்த்தப்பட்ட நிகழ்ச்சிகளின் மூலம் அறியக்கூடியதாக இருந்தது. சிங்கள மொழியில் மட்டுமல்லாமல் தலைமைத்துவம், திட்டமிடல் பேன்றவற்றிலும் குறிப்பிடக்கூடியளவு தேற்சியடைந்திருக்கின்றீர்கள். இவ் கற்கைநெறியின் ஆரம்பநாளிற்கும் இன்றைய இறுதி நாளிற்கும் இடையில் பல சிறந்த தேற்சிகளை நீங்கள் அடைந்திருப்பதை என்னால் உணரக் கூடியதாக உள்ளது. அதையிட்டு பெரிதும் மகிழ்ச்சியடைகின்றேன். மொழியின் முக்கித்துவம் பற்றி உலகின் தலைசிறந்த புரட்சியாளர்களுள் ஒருவரும், தனது இனத்தின் தனித்துவத்திற்காக பாடுபட்டவருமான தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா 'நீங்கள் கூறுவது ஒருவருடைய மூளையினைச் சென்றடைய வேண்டுமாயின் உங்கள் மொழியில் கூறுங்கள் ஆனால் அவருடைய இதயத்தினைத் தொடவேண்டுமாயின் குறித்த நபருடைய தாய்மொழியில் பேசுங்கள்' என கூறியிருக்கின்றார். எனவே எம்மால் இயன்றவரை பிற மொழிகளிலும் தேற்சிபெறுவது இளைஞர், யுவதிகளின் தகமைகயினை உயர்த்தும். 12நாள் நீங்கள் கற்ற இவ் பாடநெறியினை தொடர்ந்து உங்களுடைய அன்றாட செயற்பாடுகளில் பழக்கப்படுத்திக் கொள்வதன் மூலம் மேலும் தேற்சியினை பெற்றுக் கொள்ளமுடியும். ஒருவரிடம் எவ்வளவு திறமையிருந்தாலும் அவரிடம் முயற்சி இல்லையாயின் அவ் திறமையினால் எதனையும் சாதிக்கமுடியாது. இங்கு பல திறமையானவர்களினையும், முயற்சியுடையவர்களையும் என்னால் அவதானிக்க முடிந்தது. எனவே இப்பிரதேசத்திற்கு மேலும் ஒரு ஆங்கிலப் பயிற்சி நெறியினை வழங்குவதற்கான முயற்சியினை நான் மேற்கொள்வேன் என கூறிக்கொள்கிறேன். படுவான்கரை பிரதேசங்களின் கல்வி வளர்ச்சியில் நான் பிரத்தியேகமாக பல முயற்சிகளினை மேற்கொண்டு வருகின்றேன். எனது தலைமையில் இயங்கும் கிழக்கின் இளைஞர் முன்னணி அமைப்பின் ஊடாக  எம் இனத்தின் மீது அக்கறை கொண்ட பல இளைஞர்,யுவதிகளின் பங்குபற்றலுடன் பல வேலைத்திட்டங்கள் நடைபெற்ற வண்ணம் காணப்படுகின்றது. எமது அமைப்பின் ஊடாகவும் இப்பிரதேசத்தினைச் சேர்ந்த திறமையானவர்களைக் கொண்டு உங்களுடைய பிரதேசத்திலும் சேவை வழங்க வேண்டும் எனும் ஆசை உங்களினால் எனக்குள் தோற்றம் பெற்றிருக்கின்றது. இங்கு வருகைதந்திருப்பவர்களில் பலர் இளைஞர் யுவதிகளாக இருக்கின்றீர்கள் உங்களிற்கான இலட்சியங்களை தீர்மானித்து அதனை அடையும் பாதையில் தொடர்ந்து முயலுங்கள் நிச்சயமாக நாளை நமதாகும்' என கணேசமூர்த்தி கோபிநாத் தனது உரையில் கூறியிருந்தார்.   












Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624965

Translate