மட்டக்களப்பு தேற்றாத்தீவை பிறப்பிடமாகவும் செட்டிபாளையத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நவரெத்தினம் யோகேந்திரன் அவர்களது கவிதை நூல் வெளியீடு நேற்று(12.02.2017) ஞாயிற்றுக்கிழமை செட்டிபாளையம் மகாவித்தியால மண்டபத்தில் இடம் பி.ப .2 மணிக்கு ஆரம்பமாகி இடம் பெற்றது.
இவ் கவிதை நூல் வெளியீடு விழாவிற்கு பிரதம அதிதிகளாக கலாநிதி செ.யோகராசா சி.பாஸ்கரன் மேலதிக செயலாளர் –சிறைச்சாலை மறுசீரமைப்பு,புனர்வாழ்வு,இந்து கலாசார அமைச்சு,கலாநிதி சி.அமலாநாதன் மேலதிக செயலாளர் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு கலாநிதி மூ.கோபாலரெத்தினம் பிரதேச செயலாளர்,ம.தெ.எ.பற்று) மற்றும் சி.மனேகரன் மேலதிக மாகாண கல்வி பணிப்பாளர்,மாகாண கல்வி பணிப்பாளர்,கிழக்கு மாகாணம் ஆகியோரும் கலந்து சிறப்பித்ததுடன் சிறப்பு அதிதிகள் விசேடஅதிதிகள் ஆன்மீக அதிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இவ் நூலின் நயவுரையை கோ.குகன் விரிவுரையாளர் மொழித்துறை,கிழக்கு பல்கலைக்கழகம் வழங்கப்பட்டதுடன் ஏற்புரையை நூலாசியர் வழங்கினார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக