ஞாயிறு, 17 ஜனவரி, 2016

4 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்துவந்த சித்தப்பா சிக்கினார்

தனது மனைவியின் அக்காவின் மகளான நான்கரை வயது சிறுமியை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்திய 38 வயதுடைய சித்தப்பாவை எதிர்வரும் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராசா உத்தரவிட்டுள்ளார். 

ஆரையம்பதி அமரசிங்கம் வீதியைச் சேர்ந்த 38 வயதுடைய குடும்பஸ்தறுக்கே இவ்வாறு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தனது மனைவியின் சகோதரி வைத்தியசாலையில் தாதியாக பணிபுரிபவர். 

அவரது நான்கரை வயது மகளை தங்கையான குறித்த நபரின் மனைவியிடம் ஒப்படைத்துவிட்டே தினமும் கடமைக்குச் செல்வதுண்டு. 

இந்த சந்தர்ப்பத்தில் குறித்த சிறுமியை தொடர்ந்தும் இச்சந்தேக நபர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

குறித்த சிறுமி தனக்கு சிறுநீர் கழிக்க முடியவில்லையென அழுதபோதே வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். 

இதன்பின்னர் சிறுமி துஷ்பிரயோகத்திற்குள்ளானது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.பீ.வெதகெதர தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 


Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate