திங்கள், 18 ஜனவரி, 2016

கலாசார பேரவையின் சின்னம் வரைதல், மகுடவாக்கியம் மற்றும் கலாசார கீதம் இயற்றுவதற்கான போட்டிகள்

மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலக கலாசார பேரவையினால் நடாத்தப்படும் கலாசார விழாவினை முன்னிட்டு கலாசார பேரவைக்கான சின்னம், மகுட வாக்கியம், கலாசார கீதம் என்பவற்றை போட்டிகள் நடாத்தி தெரிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி இவற்றுக்கான போட்டிகள் கீழ் குறிப்பிடப்படும் நிபந்தனைகளின் அடிப்படையில் நடாத்தப்படவுள்ளது. ஆதலால் நிபந்தனைகளுக்கேற்ப பங்குபற்றி தங்களின் கலை ஆக்கங்களை சமர்ப்பிக்கமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 



பொது நிபந்தணைகள்
01. தங்களின் படைப்புக்கள் பிரதேசத்தின் தனித்துவத்தையும், பெருமையையும் வெளிக்காட்டும் வகையில் அமைந்திருத்தல் வேண்டும்.
02. இது மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவினை முழுமையாக  உள்ளடக்குவதாக அமைதல் வேண்டும்.
03. இப்பிரதேசத்;தினை உள்ள கலைஞர்கள் யாவரும் (பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும்) பங்குபற்றலாம்.
04. படைப்புக்கள் யாவும் தங்களின் சுய படைப்பாக அமைதல் வேண்டும். 
05. கிடைக்கப்பெறும் படைப்புக்கள் யாவும் நடுவர் குழுவினால் பரிசீலிக்கப்பட்டு சிறந்தது படைப்புக்கள் தெரிவு செய்யப்படும்.
06. தெரிவு செய்யப்படும் சிறந்த ஆக்கத்திற்கு பெறுமதியான பரிசில்கள் வழங்கப்படும்.
07. ஆக்கத்தின் முன் பகுதியில் பெயர், விலாசம் குறிப்பிடப்படாமல் பின் பக்கத்தில் குறிப்பிடப்படல் வேண்டும்.
08. படைப்புக்கள் கிடைக்கப்பெறும் இறுதித்திகதி  2016.01.30
09. படைப்புக்கள் அனுப்ப வேண்டிய முகவரி : பிரதேச செயலாளர்,
 பிரதேச செயலகம்,
 மண்முனைப்பற்று.

கலாசார பேரவை சின்னம் வரைதல்
01. பிரதேசத்தின் சிறப்பினையும் தொன்மையையும் வெளிக்காட்டும்  வகையில் அமைதல் வேண்டும்.
02. இது பிரதேச கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை  வெளிக்காட்டுவதாக அமைதல் வேண்டும்.
03. சின்னம் எமது பிரதேசத்தினை மையப்படுத்தி இருப்பதுடன் பிரதேசத்தின் தன்மை மாறாமல் அமைதல் வேண்டும்.
04. இவை வேறு சின்னங்களை தழுவியதாகவோ அல்லது அதன் மாதிரியாகவோ அமைதல் கூடாது.
05. இதற்கு விரும்பிய ஐந்து வர்ணங்களைப் பயன்படுத்தலாம்.
06. சுய படைப்பாக இருத்தல் வேண்டும்.  (கனணி வடிவில் அல்லது கையால் வரைந்ததாகவும் அமையலாம்).
07. சின்னத்தில் வரையப்படும் படங்களின் பொருள் விளக்கம் வேறு தாளில் எழுதி இணைக்கப்படல் வேண்டும்.

மகுட வாக்கியம் அமைத்தல்
01. பிரதேசத்தினை மையப்படுத்தியதாக அமைதல் வேண்டும்.
02. மகுடவாக்கியம் சுருக்கமானதாகவும், பொருள் செறிவு கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.
03. இது இரு வரிகளில் அமைதல் வேண்டும்.
04. ஏற்கனவே வெளிவந்த வாக்கியமாகவோ அல்லது அவற்றின் தழுவலாகவோ அமைதல் கூடாது.
05. பிரதேசத்தின் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை  வெளிக்காட்டுவதாக அமைதல் வேண்டும்.

கலாசார கீதம் அமைத்தல்
01. பிரதேசத்தின் பெருமை, தொன்மை, சிறப்புக்களை வெளிக்காட்டுவதாக அமைதல் வேண்டும்.
02. தெளிவான மொழிநடையில் அமைதல் வேண்டும்.
03. பண்ணோடு பாடக்கூடியதாக அமைதல் வேண்டும்.
04. ஏற்கனவே வெளிவந்த வரிகளாகவோ அல்லது அவற்றின் தழுவலாகவோ அமைதல் கூடாது.
05. சுய படைப்பாக இருத்தல் வேண்டும். (கனணி வடிவில் அல்லது கையால் எழுதியதாகவும் அமையலாம்).

பிரதேச செயலாளர்,
பிரதேச செயலகம்,
மண்முனைப்பற்று.

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate