சனி, 30 ஜனவரி, 2016

மட்டக்களப்பில் நடைபெற்ற மகாத்மா காந்தியின் 68 வது நினைவுதின நிகழ்வு

இந்தியாவிற்கு அகிம்சா வழியில் போராடி சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்த மகாத்மா காந்தி அடிகளாரின் 68 வது நினைவு தினம் இன்றாகும். அதனை முன்னிட்டு மட்டக்களப்பில் விசேட நினைவுதின நிகழ்வுகள்  இன்று (30) சனிக்கிழமை இடம்பெற்றன.

மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் உப தலைவர் சி.குமாரசாமி தலைமையில்  மட்டக்களப்பு  காந்தி பூங்காவில் இடம்பெற்ற நினைவு தின நிகழ்வின் போது அங்கு அமைந்துள்ள அடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலைகள் அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து நிகழ்விற்கு வருகைதந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மற்றும் கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் ஆகியோரின்  சொற்பொழிவுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் காந்தி சேவா சங்கத்தின் உறுப்பினர்கள், அரசியல் மற்றும்  சமூக பிரதிநிதிகள் உள்ளடங்களாக பொதுமக்களும்  கலந்துகொண்டிருந்தனர்.






Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate