சர்வதேச விண்வெளி மையத்தில் பூத்துள்ள மலரின் படத்தை விண்வெளியில் சுற்றி வரும் விஞ்ஞானி ஸ்காட் கெல்லி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் கடந்த நவம்பர் மாதம் மலர்கள் வளர்ப்பிற்கான சோதனையை, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெற்றிகரமாக சோதனை செய்தது.
இந்நிலையில் சர்வதேச விண்வெளி மையத்தில் வெற்றிகரமாக 250 நாளைக் கடந்துள்ள அமெரிக்க விண்வெளி வீரரான ஸ்காட் கெல்லி, சர்வேதேச விண்வெளி மையத்தில் வளர்க்கப்பட்ட முதல் மலரான சூரிய காந்தி குடும்பத்தை சேர்ந்த ஜின்னியா மலரை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
இந்த மலரை உணவாக பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.







0 facebook-blogger:
கருத்துரையிடுக