வெள்ளி, 15 ஜனவரி, 2016

தைமகளே வருவாய் - தமிழர் உய்ய வழி தருவாய்... - ஞா.ஸ்ரீநேசனின் வாழ்த்துச் செய்தி

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான ஞா.ஸ்ரீநேசன் அவர்களின் 
தைத்திருநாள் வாழ்த்து செய்தி ..

தைமகளே வருவாய் - தமிழர் 
உய்ய வழி தருவாய்...
கைகள் கூப்பி வரவேற்கின்றோம் 
காரியம் பலிதமாக்க வருவாய் 
தேசிய இனப்பிரச்சனை தீரவேண்டும் 
தேடும் உறவுகள் பதிலாய் வரவேண்டும் 
சிறைக்கதவுகள் திறக்க வேண்டும் 
செந்தமிழ் உறவுகள் வெளிவரவேண்டும் 
விதவைகள் வடிக்கும் கண்ணீருக்கு 
விடையும் கிடைக்கவேண்டும் ..
வலுவிழந்தோர் வாழ்வுக்கு 
ஒளி பாய்ச்ச வேண்டும் 
தனித்துவம் மிக்க மக்களின் 
மகத்துவம் மண்ணை நிறைக்க வேண்டும் 
மொத்தத்தில் சமத்துவம் மலர்வதற்கு 
சகோதரத்துவம் வளர்வதற்கு...
தை மகளே வருவாய் 
தலை நிமிர்த்த வருவாய்.!

இத்தைத்திரு நாளில் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் அன்பான நல் வாழ்த்துக்கள்.. 
G.Srineshan

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate