செவ்வாய், 19 ஜனவரி, 2016

மணல் ஏற்றப்பட்ட உழவு இயந்திரங்களுடன் மூவர் கைதுமணல் ஏற்றப்பட்ட உழவு இயந்திரங்களுடன் மூவர் கைது

மட்டக்களப்பு, சித்தாண்டிப் பகுதியிலுள்ள சந்தனமடு ஆற்றிலிருந்து சட்டவிரோதமாக மணல் அகழ்ந்து நகரப் பகுதிக்கு கொண்டு செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் மூன்று பேரை திங்கட்கிழமை (18) இரவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

இது தொடர்பில் பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலைத் தொடர்ந்து குறித்த இடத்துக்குச் சென்று  மணல் ஏற்றப்பட்ட மூன்று உழவு இயந்திரங்களுடன் அதன் சாரதிகளையே கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட மணல் ஏற்றிய உழவு இயந்திரங்கள் ஏற்hவூர் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன. சந்தேக நபர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate