இலங்கையைச் சேர்ந்தவரும், தற்போது கனடா நாட்டில் வசித்து வருபவருமான சர்வதேச சட்டத்தரணி கண்ணமுத்து சிதம்பரநாதன் இலங்கையில் ஏற்படுத்தப்பட விருக்கின்ற புதிய அரசியல் சாசனத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய விடையங்களை புதிய அரசியல் சாசனம்> உருவாக்கும் குழுவிற்கு அனுப்பி வைத்துள்ளனார். அதில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது.
திங்கள், 29 பிப்ரவரி, 2016
ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016
மட்டக்களப்பபில் இடம்பெற்ற ஈரோஸ் ஜனநாயக முன்னணி பிரகடன நிகழ்வு .
(லியோ )
இலங்கையின் அரசியல் வரலாற்றில் புரட்சியினை ஏற்படுத்திய ஈழப் புரட்சி அமைப்பினால் ஈரோஸ் ஜனநாயக முன்னணி பிரகடன நிகழ்வு நேற்று மட்டக்களப்பில் இடம்பெற்றது .
சனி, 27 பிப்ரவரி, 2016
மட்.திருப்பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி ( படங்கள்)
புதன், 24 பிப்ரவரி, 2016
கல்முனை ஆதார வைத்தியசாலை உத்தியோகத்தர் மீது தாக்குதல்
(Visho)
கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடமை நேரத்தில் இதய துடிப்ப பதிவு தொழில்நுட்பவியலாளர் ச.கிருஸ்ணகுமார் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அவரது கடமை அறையில் அத்துமீறி உட்புகுந்த வெளியார் ஒருவர்,; திடீர் தாக்குதல் நடாத்தியது சம்பந்தமாக பாதிக்கப்பட்டவரால் கல்முனைப பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.எனினும் தாக்கியவர் இரு நாட்கள் கடந்த நிலையிலும் இதுவரை கைது செய்யப்படவில்லையென பாதிக்கப்படடவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். வைத்தியசாலை நிர்வாக நடவடிக்கைகளும் மந்தகதியில் இடம் பெறுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த வைத்திய அலகில் இடம்பெற்ற கடமை ஒதுக்கீடு சம்பந்தமாக தாக்குதலுக்குள்ளானவருக்கும், அதே அலகில் பணிபுரியும் இன்னொரு பெண் உத்தியோகத்தருக்குமிடையே எழுந்த பிரச்சனை தொடர்பாகவே இத் தாக்குதல் சம்பவம்இடம் பெற்றிருக்கலாமென வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பிரச்சனை குறித்து பொது இணக்கப்பாடடிற்கு வந்து கொண்டிருந்நத வேளையிலேயே இத் தாக்குதல் சம்பவம் இடம் பெற்றதாக பாதிக்கப்படவர் தெரிவிக்கின்றார்.அது ஒரு அவசியமற்ற கண்மூடித்தனமான நாகரீகமற்ற சட்ட திட்டங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு தாக்குதல் என அவர் தெரிவிக்கின்றார்.சும்பவ தினத்தில் இருந்து அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவரும் அவர் கைவிரலில் ஏற்பட்ட காயத்திற்காகவும் முகத்தில் தாக்கியதால் உட் தலையும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்;. இதற்காக அம்பாரை வைத்தியசாலைக்கும் செல்ல வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.
இதனால் படித்துக் கொண்டிருக்கின்ற தனது 3 பிள்ளைகளும் மனைவியும் உளப் பாதிப்பிற்குள்ளாகியதாகவும் அவர் தெரிவித்தார்;நல்லாட்சி நிலவுகின்ற காலத்தில், ஆதார வைத்தியசாலையில் கண்காணிப்பு கமராக்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில். பாதுகாப்பு ஊழியர்கள் கடமையில் இருக்கும் வேளையில், தாக்கியவர் ஒரு அரச உத்தியோகத்தராக இருந்த போதும,; நடைபெற்ற இத் துர்ப்பாக்கிய சம்பவம் தொடர்பாக தமக்கு துரிதமாக நீதி கிடைக்கவேண்டுமென பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் கோரிக்கை விடுக்கின்றனர்.

செவ்வாய், 23 பிப்ரவரி, 2016
திங்கள், 22 பிப்ரவரி, 2016
கிழக்கின் இளைஞர் முன்னணியின் (க.பொ.த) சாதாரண தர மாணவர்களிற்கான இலவச கல்விக் கருத்தரங்கு.
ஓர் சமூகத்தின் உண்மையான வளர்ச்சியானது அச் சமூகம் கல்வியில் வளரச்சியடைவதன் மூலமே அடையமுடியும். கல்வி வளர்ச்சியடையும் போது புறக்கணிப்புக்கள் தடுக்கப்பட்டு தானாகவே தனித்துவமான ஓர் அடையாளத்தைப் பெறமுடியும் அதனை அடிப்படையாக கொண்டு 'கல்வியில் புரட்சி செய்து எம் தமிழ் சமூகத்தின் நிலையினை உயர்த்திடும் உன்னத முயற்சி' எனும் தொனிப்பொருளில் கிழக்கின் இளைஞர் முன்னணியின் தலைவர் கணேசமூர்த்தி கோபிநாத்தின் திட்டமிடலுக்கு அமைய படுவான்கரை பிரதேசங்களில் காணப்படும் மாணவர்களின் (க.பொ.த) சாதாரண தர பரீட்சைத் தேர்ச்சி மட்டத்தை அதிகரிக்கும் நோக்கத்தின் அடிப்படையில் 2016ம் ஆண்டு பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களிற்கான இலவச கல்விக் கருத்தரங்கு 20.01.2016, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் நடைபெற்றிருந்தது. இன்றைய தினம் வரலாறு பாடத்திற்கான விரிவுரை குருமண்வெளியினை சேர்ந்த முன்னணியின் உறுப்பினரும் ஆசிரியருமான செந்தில்நாதன் டிலோஜன் அவர்களாலும், கணிதப்பாடத்திற்கான விரிவுரைகள் களுவாஞ்சிகுடியினைச் சேர்ந்த பிரபல கணித ஆசிரியரும் ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகருமான கணிதக்கனி கிருஸ்ணபிள்ளை ஆசிரியரினால் மட்-பட்-வெல்லாவளி கலைமகள் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற இவ் கருத்தரங்கில் படுவான்கரைப் பிரதேசத்திலுள்ள பல பாடசாலைகளில் இருந்தும் 150 ற்கு மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர். அத்துடன் இவ் கருத்தரங்கு தொடர் கருத்தரங்காக நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக முன்னணியின் தலைவர் கணேசமூர்த்தி கோபிநாத் தெரிவித்திருந்தார்.
கிழக்கின் இளைஞர் முன்னணியினால் நடாத்தப்பட்ட இரத்த தான நிகழ்வு
மாசி மஹா மக கடலாடல் - தேற்றாத்தீவில்
12ஆண்டுகளுக்கு ஒருதடவை நடைபெறும் மாசி மஹாமகம் புனித கடலாடல் இன்று(22.02.2016) திங்கட்கிழமை தேற்றாத்தீவிலும் வெகு சிறப்பாக நடைபெற்றது. அந்த வகையில் இன்று அதிகாலை 4.00 மணியளவில் கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து சுவாமி வீதியுலா வருகை தொடர்ந்து. இந்து சமுத்திரகடற்கரையில் சுவாமிக்கு விசேட பூஜை மற்றும் அபிஷேகம் இடம் பெற்றதை தொடர்ந்து தீர்த உற்சவம் அதிகாலை 5.00 மணியளவில் இடம் பெற்றது.
சனி, 20 பிப்ரவரி, 2016
வெள்ளி, 19 பிப்ரவரி, 2016
கணவர் கண்டுபிடித்துத்தருமாறு மனைவி மன்றாட்டம்
மட்டக்களப்பு - நாவற்குடாவைச் சேர்ந்த பாக்கியராஜா
விஜயகுமார் (வயது 36) என்பவர் கொழும்பு - மருதானையில் கடந்த 2ஆம் திகதி காணாமல்போய் இதுவரை தமக்கு எவ்வித
தகவலும் கிடைக்கவில்லை என காணாமல் போனவரின் மனைவி தெரிவித்துள்ளார்.
மட்டு நகரின் மாபெரும் கிரிக்கெட் சமர் நாளை ஆரம்பம்
மட்டுநகரில் சுமார் 40 வருடகாலமாக விளையாட்டு துறையில் முன்னனி வகிக்கும் கழகங்களாக கோட்டைமுனை விளையாட்டு கழகமும், சிவானந்தா விளையாட்டு கழகமும் திகழ்வதை மட்டக்களப்பு மக்கள் அறிவார்கள்.
இக்கழகங்களில் இருந்து தமது திறமையை வெளிக்கொணர்ந்த பல வீரர்கள் தற்போது இலங்கையிலும் புலம்பெயர்ந்து வெளிநாடுகளிலும் உயர்பதவிகளை வகிப்பதை நாம் அவதானிக்க கூடியதாகவுள்ளது. எனவே இவ்விரு கழகங்களும் தங்களிடையே இருக்கும் உறவை நட்பு ரீதியாக எப்பொழுதும் ஒரு ஒன்றிப்பான கழகங்களாக செயற்பட்டு வருவதை நாம் பல இடங்களில் அவதானிக்க கூடிதாக உள்ளது.
இந்த நட்பின் செயற்பாடாகவே சிவானந்தா விளையாட்டு கழகமும் கோட்டைமுனை விளையாட்டு கழகமும், சினேகபூர்வமான ஒரு கடின பந்து கிரிக்கெட் போட்டியை ஏற்பாடு செய்து வருடந்தோரும் மிக சிறப்பாக நடாத்தி வருகின்றது, இதன் முதல் போட்டினது 2009ம் ஆண்டு நடைபெற்றது குறிப்பிடத்தக்க விடயமாகும், இந்த நட்பு ரீதின கிரிக்கெட் போட்டிக்கு மட்டுநகரை முதன்னிலைப்படுத்தி ஒரு பெயர் வைத்தால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணியவுடன் வைக்கப்பட்ட பெயர் தான் Battle of Batti ஆகும் இந்த மாபெரும் கிரிக்கெட் சமரின் பிதாமகன் யார் என்று உங்களுக்கு தெரியுமா?; அவர் தான் எம்மை விட்டு மறைந்த சிவானந்தா விளையாட்டு கழக வீரரான அமரர்.தனபால். அமரர்.தனபால்; 2009ம் ஆண்டு நடைபெற்ற இம்முதல் தொடரில் கலந்து கொண்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அதன் பின் இத்தொடரை கோட்டைமுனை விளையாட்டு கழகத்தில் இருந்து மறைந்த அமரர்.பிரகாஸ் அவர்களின் ஞாபகார்த்தமாகவும், சிவானந்தா விளையாட்டு கழகத்தில் இருந்து மறைந்த அமரர்.தனபால் அவர்களின் ஞாபகாத்தமாகவும் தற்போது நடைபெற்று வருகின்றது கடந்த வருடம் இச்சமர் சமநிலையில் முடிவுற்றது, இவ்வருடமும் 9வது தடவையாக மிக சிறப்பாக நடைபெற்றவுள்ளது. இனி கழகங்கள் பற்றி அறிந்து கொள்வோம்
கோட்டைமுனை விளையாட்டு கழகம் - 1970ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கழகம் அக்காலத்தில் கோட்டைமுனை மகாவித்தியாலத்தில் கல்வி பயின்ற மாணவர்களால் உருவாக்கப்பட்ட கழகமாகும். கிரிக்கெட் விளையாட்டையே பிரதானமாக கொண்ட இக்ககழகம் பிற்காலத்தில் உதைபந்தாட்டம், மெய்வல்லுனர் போட்டிகளில் பிரகாசித்து சாதனை படைத்துள்ளது. இச்சமரில் இவ்வருடம் கலந்து கொள்ளும் அணிக்கு தலைவராக லஜிகுமார அவர்கள் செயற்படவுள்ளார்.
இக்கழக வீரர்களை பொறுத்த வரை துடுப்பாட்டத்தில் தற்காலத்தில் பிரகாசித்து வரும் வினோhதனை குறிப்பிடலாம் அவர் அன்மையில் கல்லாறு விளையாட்டு கழகத்துடன் நடைபெற்ற போட்டியில் 15 பந்துகளை எதிர்கொண்டு 50 ஓட்டங்களை பெற்று சாதனை படைத்து குறிப்பிடத்தக்க விடயமாகும் அத்துடன் பாடசாலை மட்டப்போட்டிகளில் 206 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்ற அஸ்லியும் இக்கழகத்திற்கு பக்கபலமாக இருப்பதுடன், அணித்தலைவரும் விக்கெட்காப்பாருமான லஜிகுமார அவர்களையும், சகலதுறை ஆட்டக்காரர் டெனிக் அவர்களையும் கோட்டைமுணை விளையாட்டு கழகம் நம்பியுள்ளது எனலாம். பந்து வீச்சில் அன்மையில் கல்லாறு விளையாட்டு கழகத்துடன் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றிய சுழல் பந்து வீச்சாளர் டிலக்சன், வேகப்பந்து வீச்சாளர் சாரு மற்றும் அனுபவசாலியான யது அவர்களையும் கோட்டைமுனை விளையாட்டு கழகம் பெரிதும் நம்பியுள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும். இம்முறை தாம் வெற்றி கொண்டு கின்னத்தை தனதாக்கி கொள்வதற்கான சகல முயற்ச்சிகளையும் மேற்கொள்வதாக கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் பயிற்றுவிப்பாளர் ரெட்ணராஜ் தெரிவித்துள்ளார்.
சிவானந்தா விளையாட்டு கழகம் - 1972ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கழகம் சிவானந்தா தேசிய பாடசாலை வீரர்களையே பிரதானமாக கொண்டு செயற்பட்டு வரும் ஒரு கழகமாகும். ஆரம்ப காலங்களில் உதைபந்தாட்டத்தில் தம்மை நிலை நிறுத்தினாலும் பிற்காலத்தில் கிரிக்கெட் போட்டிகளுக்கும் முன்னுரிமை வழங்கி வருவதை அவதானிக்க கூடியதாகவுள்ளது. இச்சமரில் கலந்து கொள்ளும் அணிக்கு தலைவராக ஜெனிசிஸ் அவர்கள் செயற்படவுள்ளார். வீரர்களை பொறுத்த வரை துடுப்பாட்டத்தில் தனக்கே உரிய பாணில் பிரகாசித்து வரும் அனோஜன் விரைவாக ஓட்டம் பெறக்கூடிய பிரசாத் மற்றும் ஜினேந்திரா போன்றோரை குறிப்பிடலாம் பந்து வீச்சில் அனுபவ வீரரான சுழல் பந்து வீச்சாளர் கனிஸ்டனை சிவானந்தா விளாட்டு கழகம் முழுமையாக நம்பியுள்ளது மற்றும் வேகப்பந்து வீச்சை பொறுத்தவரை சிலக்சன், நிரோசன் போன்றேரையும் இக்கழகம் நம்பியுள்ளதாக அணியின் பயிற்சிசாளர் வில்லி பிரான்ட் தெரிவித்ததோடு இம்முறை தாம் வெற்றி கொள்வது உறுதி என தெரிவித்துள்ளார்.
இத்தொடரானது இரு கழகங்களையும் இணைக்கும் ஒரு உறவு பாலமாக இருப்பதை அவதானிக்க கூடியதாகவுள்ளது எனவே எதிர்வரும் 20,21,22 (சனி,ஞாயிறு,திங்கள்) ஆகிய தினங்களில் சிவானந்தா விளையாட்டு மைதனத்தில் மிக சிறப்பாக சிவானந்த விளையாட்டு கழகம் நடாhத்தவுள்ளது எனவே சகல இரு கழக வீரர்களையும் ஒன்று கூடுமாறும் வீரர்களுக்கான வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்ளுமாறு கோட்டுக் கொள்கின்றோம்.
தகவல்
பாலசிங்கம் ஜெயதாசன்
செயலாளர்
கோட்டைமுணை விளையாட்டு கழகம்

வியாழன், 18 பிப்ரவரி, 2016
சிவில் பாதுகாப்புக்குழுவின் ஏற்பாட்டில் பொது மக்களுக்கான நடமாடும் சேவை-படங்கள்.
167பி புதிய காத்தான்குடி கிழக்கு சிவில் பாதுகாப்புக்குழுவின் ஏற்பாட்டில் பொது மக்களுக்கான நடமாடும் சேவை ஒன்று 06-02-2016 நேற்று செவ்வாய்க்கிழமை 167பி புதிய காத்தான்குடி கிழக்கு பலநோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.
167பி புதிய காத்தான்குடி கிழக்கு சிவில் பாதுகாப்புக்குழுவின் தலைவர் எம்.ஏ.சீ.எம்.நியாஸ் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நடமாடும் சேவையை காத்தான்குடி பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.
இந் நடமாடும் சேவை ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்தியம் ஒன்றிற்கான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.பி.ரத்நாயக்க, காத்தான்குடி நகர சபையின் செயலாளர் ஜெ.சர்வேஸ்வரன்,காத்தான்குடி பிரதேச கிராம சேவகர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் எம்.கோமலேஸ்வரன், காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆரிய பந்து வெதகெதர, அதன் மோட்டார் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.ஜி.துஷார திலங்க ஜெயலால்,காத்தான்குடி பொலிஸ் நிலைய சிவில் பாதுகாப்பு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.செல்வராஜா, 167பி புதிய காத்தான்குடி கிழக்கு பிரிவு கிராம சேவை உத்தியோகத்தர்,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோக்கதர்,அபிவிருத்தி உத்தியோக்தர், 167பி புதிய காத்தான்குடி கிழக்கு சிவில் பாதுகாப்புக்குழுவின் பிரதிநிதிகள் ,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த நடமாடும் சேவையில் ஆயுர்வேத வைத்தியப் பிரிவு,பொலிஸ் பிரிவு,பிறப்பு,இறப்பு,திருமணப் பதிவுப் பிரிவு, தேசிய அடையாள அட்டைக்காக முதன்முறையாக விண்ணப்பித்தல், தேசிய அடையாள அட்டையைப் புதிப்பித்தலுக்காக விண்ணப்பித்தல், தொலைந்த அடையாள அட்டைக்காக விண்ணப்பித்தல் போன்ற பிரிவுகளில்; பொது மக்களுக்கு சேவைகள் வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பித்தலின் போது பொலிஸ் முறைப்பாடு, மற்றும் புகைப்படம் எடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இந்த நடமாடும் சேவையில் ஆண்கள், பெண்கள்; என பலரும் கலந்து கொண்டனர்.
மேற்படி நடமாடும் சேவையில் தேசிய அடையாள அட்டை பெறுவதற்காக பொது பொலிஸ் உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் ,சமாதான நீதவான் ஆகியோர் தங்களது சேவைகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதன், 17 பிப்ரவரி, 2016
சிப்தொற புலமைப்பரிசில் கல்விக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு
காத்தான்குடி பகுதியில் கொள்ளையிடப்பட்ட பொருட்கள் மீட்பு - மூன்று இளைஞர்கள் கைது
பல்கலைக்கழக மாணவர்களுக்கு கல்விக்கான உதவி தொகை வழங்கும் நிகழ்வு
திங்கள், 15 பிப்ரவரி, 2016
ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016
மட்டுநகர் கோட்டைமுனை கழக வீரர் 15 பந்துகளில் 50 ஓட்டங்கள் பெற்று சாதனை
மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடாத்தும் கழகங்களுக்கிடையிலான மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர் கடின பந்து கிரிக்கெட் போட்டியில் கோட்டைமுனை விளையாட்டு கழக வீரர் த.வினோதன் 15 பந்தகளுக்கு முகம் கொடுத்து 50 ஓட்டங்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் சங்கம் கழகங்களுக்கிடையிலாக நடாத்தும் 50 ஓவர் கடின பந்து கிரிக்கெட் போட்டியில் கோட்டைமுனை விளையாட்டு கழகத்திற்கும் கல்லாறு விளையாட்டு கழகத்திற்குமான போட்டியானது கல்லாறு விளையாட்டு மைதானத்தில் 14.02.2015 அன்று நடைபெற்றது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய கல்லாறு விளையாட்டு கழகத்தினர் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 91 ஓட்டகளை பெற்றது. இதில் தனுராஜ் 30 ஓட்டங்களை பெற்றர் பந்து வீச்சில் டிலக்சன் 30 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களையும் சாரு 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கோட்டமுணை விளையாட்டு கழகம் 6 பந்து வீச்சு ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 92 ஓட்டங்களை பெற்று வெற்றிவாகை சூடியது. இதில் வினோதன் ஆட்டமிழக்காமல் 23 பந்துகளை எதிர் கொண்டு 65 ஓட்டங்களையும், டெனிக் ஆட்டமிழக்காமல் 13 பந்துகளை எதிர் கொண்டு 23 ஓட்டங்களையும் பெற்றது குறிப்பிடத்தக்க விடயமாகும். இதில் த.வினோதன் 15 பந்தகளுக்கு முகம் கொடுத்து 50 ஓட்டங்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.
