அம்பாறை மாவட்டத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று திங்கட் கிழமை அம்பாறை மாவட்ட செயலக கூட்ட மண்டபத்தில் இணைத்தலைவர்களாக ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் தயாகமகே, முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.மன்சூர், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்றது.
அம்பாறை மாவட்ட செயலகத்தின் செயலாளர் துஷித பி வணிக சிங்கவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோ, பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், நிறுவனங்கள், திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதன் போது சென்ற வருட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், 2016 ஆம் ஆண்டின் ஒதுக்கீடுகள், வேலைத்திட்டங்கள் தொடர்பிலான ஆலோசனைகள் திட்ட வரைபுகள் பற்றி கருத்துப் பரிமாறல்கள் இடம் பெற்றன.















0 facebook-blogger:
கருத்துரையிடுக