மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு விழா 2015இல் மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் செங்கலடி பிரதேச செயலகமும் இணைச்சம்பியன்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட கழகங்களுக்கிடையிலான விளையாட்டு விழா நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்கள மாகாண பணிப்பாளர் மதிவண்ணன் தலைமையில் ஆரம்பமானது .
ஆரம்பமான விளையாட்டு விழாவில் கலந்துகொண்ட ஓட்டமாவடி பிரதேச செயலக செயலாளர் எம் .எம் . நவ்பல். மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் எஸ் . விஜயநீதன் ,பட்டிப்பளை பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் . டி .யோகானந்தராஜா ஆகியோரினால் தேசிய ,மாகாண மற்று மாவட்ட விளையாட்டு கொடிகள் ஏற்றப்பட்டு 2015 ஆண்டுக்கான மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு விழா ஆரம்பமானது .
இவ்விளையாட்டு நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கிடையில் கடந்த இரண்டு மாதங்களாக நடத்தப்பட்ட மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகளில் இறுதி போட்டிக்கு தெரிவான பிரதேச செயலக விளையாட்டு வீரர்களின் இறுதி போட்டி நிகழ்வுகள் நேற்று பிற்பகல் 03.30 மணியளவில் மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது
.
இந்நிகழ்வில் 25 விளையாட்டு போட்டி நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் , இப்போட்டிகளில் சுமார் 150 மேற்பட்ட வீர வீராங்கனைகள் கலந்துகொண்டனர் . அணியினரும்
இன்று இடம்பெற்ற இறுதி போட்டி நிகழ்வில் 125 புள்ளிகளை பெற்ற மண்முனை வடக்கு பிரதேச செயலக அணியினரும் , 125 புள்ளிகளை பெற்ற செங்கலடி பிரதேச செயலக அணியினரும் இணைந்த வெற்றி அணியினராக முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்டனர் .
இரண்டாம் இடத்தினை 34 புள்ளிகளை பெற்ற வாழைச்சேனை பிரதேச செயலக அணியினரும் ,34 புள்ளிகளை பெற்ற கிரான் பிரதேச செயலக அணியினரும் இணைந்த வெற்றி அணியினராக மூன்றாம் இடத்தினை பெற்றுக்கொண்டனர் .
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் .எஸ் .கிரிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் , சிறப்பு விருந்தினர்களாக மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எஸ் .ரங்கநாதன் , மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி . தவராசா , செங்கலடி பிரதேச செயலாளர் உதயஸ்ரீ ஆகியோர் கலந்துகொண்டனர்.

0 facebook-blogger:
கருத்துரையிடுக