சனி, 19 செப்டம்பர், 2015

கபடிப் போட்டி நிகழ்வினில் கிரான் பாடசாலை அணியினர் தங்கப்பதங்கம் மற்றும் வெங்கலப் பதக்கத்தினைபெற்றுள்ளனர்

(நித்தி)

அகில இலங்கை பாடசாலைக் கிடையிலான கபடிப் போட்டி நிகழ்வினில் கிரான் பாடசாலை அணியினர் தங்கப்பதங்கம் மற்றும் வெங்கலப் பதக்கத்தினை பெற்றுள்ளனர். கடந்த 12,13,14 ஆகிய தினங்களில் திருகோணமலை கிண்ணியா தேசிய விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது. இலங்கையின் 09 மாகணங்களிலிருந்தும் ஒவ்வொரு வயதுப் பிரிவிலும் 27 அணிகள் பங்கு பற்றின பலத்த சவாலுகளுக்கு மத்தியில் இடம் பெற்ற போட்டியில் மட்/ககு/கிரான் மகாவித்தியாலயம் 19 வயது பெண்கள் அணியினர் தங்கப்பதக்கத்தையும், 19 வயது  ஆண்கள் வெங்கலப் பதக்கத்தையும் பெற்று எமதுகிழக்கு மாகாணத்திற்கு பெருமையினை ஈட்டிக் கொடுத்துள்ளனர்.இப் 19 வயதுபெண்கள் அணியினர் சிறந்த வீரருக்கான விருதினை செல்வி.கஜேந்தினி அவர்கள் பெற்றுக் கொண்டார். 

இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்ன வென்றால் முதல் முறையாக மட்டகளப்பு மாவட்டத்தில் கபடிப் போட்டி நிகழ்வில் தங்கப் பதக்கம் பெற்றுக் கொண்டமை இது வேயாகும். அதே போன்று ஒரு பாடசாலையில் இருந்து 02 பதக்கங்களை பெற்றுக் கொண்டமைமுதல் சந்தர்ப்பமாகும். இவ் போட்டிநிகழ்வில் பங்கு பற்றிய அணிகளில் அதிகளவான விருதுகளைப் பெற்ற அணியாக கிழக்கு, வடக்கு தமிழ் அணிகளேயாகும். வெற்றியீட்டிய பாடசாலை மாணவர்களையும்,பயிற்றுவிப்பாளர்களான மதன்சிங் மற்றும் கோபி ஆசிரியர்களை வரவேற்கும் நிகழ்வு (18.09.2015)நேற்று மாலை கிரான் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினாலும், கிரான் பொது மக்களினாலும்,கிரான் கருணா ஐக்கிய விளையாட்டு கழகத்தினாலும் வாகன ஊர்வலத்துடன் வரவேற்பளிக்கப்பட்டது.




Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624984

Translate