செவ்வாய், 8 மார்ச், 2016

பிரசாந்தனின் விளக்கமறியல் நீடிப்பு

மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் இடம் பெற்ற இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் உட்பட இரு சந்தேக நபர்களுக்கு தொடர்ந்தும் இரு வாரங்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது,

 கைது செய்யப்பட்ட இரு நபர்களையும் எதிர்வரும்  21 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராசாவினா நேற்று உத்தரவிட்டுள்ளார்,

மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் திகதி அரசாங்க பாடசாலையொன்றின் ஆசிரியரான தமிழ்நாடு என அழைக்கப்படும் கிருஸ்ணபிள்ளை மனோகரன் உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இது தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர் பூ.ஹரன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624964

Translate