செவ்வாய், 8 மார்ச், 2016

சிறுவர் பெண்களுக்கு எதிரான வன்முறையினை கண்டித்து மட்டக்களப்பில் போராட்டம்


பெண்கள் சிறுவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைகளுக்கு துரித நீதி வழங்க கோரி பெண்கள் அமைப்புகள் இணைந்து கறுத்தகொடி போராட்டத்தினை மட்டக்களப்பு நகரில் இன்று செவ்வாய்க்கிழமை காலை நடாத்தினர்.

அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பு இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தினை மட்டக்களப்பு நகரில் உள்ள காந்திபூங்கா அருகில் நடாத்தினர்.

இன்று சர்வதேச மகளிர் தினம் அனுஸ்டிக்கப்பட்டுவருகையில் பெண்கள் தங்களுக்கான மகிழ்ச்சி தினத்தினை கறுப்பு தினமாக அனுஸ்டிக்கும் வகையில் தள்ளப்பட்டுள்ளதாக பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இலங்கையில் அதிகரித்துச்செலும் பெண்களுக்கு சிறுவர்களு;ககு எதிரான வன்முறையில் ஈடுபடுவோர் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும் எனவும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

பெண்,சிறுவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் பாலியல் வன்முறைகளை தேசிய பிரச்சினையாக அரசாங்கம் அறிவிக்கும் வரையில் இந்த போராட்டத்தினை நடாத்தவுள்ளதாகவும் போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் 2014ஆம் ஆண்டு தொடக்கம் அரசாங்கத்தினை கோரிவருவதாகவும் இந்த கடந்த டிசம்பர் மாதம் கூட புதிய ஜனாதிபதிக்கு இது தொடர்பான கோரிக்கைகள் விடுத்தபோதிலும் அது தொடர்பில் எந்த பதிலும் இதுவரை அளிக்கப்படவில்லையெனவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க கோரும் பல்வேறு வசனங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்ததுடன் கறுப்பு உடைகள் அணிந்த நிலையில் கறுப்பு கொடிகளையும் ஏந்தியிருந்தனர்.

அத்துடன் வீதிகளில் பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைக்குறிக்கும் பதாகைகளையும் தொங்கவிட்டிருந்தனர்.

இன்று சர்வதேச மகளிர் தினத்தினை தொடர்ந்து பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக கடுமையான நீதி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் வரையில் சகல தினங்களையும் இருண்ட நாளாக அனுஸ்டிக்குமாறும் இங்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் பெண்கள் அமைப்புகளின் உறுப்பினர்கள்.பல்கலைக்கழக மாணவர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.














Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624966

Translate