திங்கள், 25 ஜனவரி, 2016

விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய விருத்தி தேசிய வாரம் - மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில்


விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய விருத்தி தேசியவாரம் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் அவர்களது தலைமையில் (25.02.2016) திங்கட்கிழமை பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் உதவிப் பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.



இந்நிகழ்வின் போது பிரதேச செயலாளரினால் விளையாட்டுக்கள் தொடர்பாகவும் அதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் தொடர்பாகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. செயற்பாட்டு ரீதியான விளக்கங்கள் விளையாட்டு உத்தியோகத்தரினால் பயிற்றுவிக்கப்பட்டதுடன் பிரதேச செயலக அனைத்து உத்தியோகத்தர்களும் உடற்பயிற்சியில் ஈடுபட்டனர்.





Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624977

Translate