திங்கள், 25 ஜனவரி, 2016

மண்டூரில் கஞ்சா வைத்திருந்த பெரும்பான்மையினத்தவர் கைது


மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் பாலமுனைப்பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு கஞ்சா வைத்திருந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்தவரை சோதனை செய்தபோது அவரிடம் இருந்து 400கிராம் கஞ்சா மீட்கப்பட்டதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர் எனவும் அம்பாறை,உகனை பிரதேசத்தினை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபரை கைது செய்துள்ள பொலிஸார் அவர் தொடர்பான விசாரணையை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தனர்.


Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624977

Translate