சனி, 30 ஜனவரி, 2016

கிரானில் இடம்பெற்ற உடல் நல மேம்பாட்டு நிகழ்வு

(விது)

அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் ஆலோசனைக்கமைய விளையாட்டுத்துறை அமைச்சினால் முன்மொழியப்பட்ட “விளையாட்டு, உடல்நல மேம்பாட்டு தேசிய வாரத்தை” முன்னிட்டு “உடற்பயிற்சி மூலம் தொற்றா நோயின் தாக்கத்திலிருந்து எம்மைப் பாதுகாப்போம்;” என்னும் தொனிப்பொருளின் அடிப்படையில் கிரான் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட துவிச்சக்கரவண்டி ஓட்டும் உடற்பயிற்சி நிகழ்வு கிரான் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஆர்..ரவிச்சந்திரன் தலைமையில் வேர்ல்ட் விசன் நிறுவனத்தின் அனுசரணையில் 29.01.2016 வெள்ளிக்கிழமை கிரானில் இடம்பெற்றது.


இந்நிகழ்வானது சந்திவெளி சித்திவிநாயகர் பாடசாலையில் இருந்து ஆரம்பித்து 4KM தூரம் வரை சென்று ஸ்ரீ றமண மஹரிஷி வித்தியாலயத்தில் நிறைவுற்றது. 

இந்நிகழ்வில் கிரான் சுகாதார வைத்திய அலுவலகத்தில் கடமையாற்றும் பொது சுகாதாரப் பரிசோதகர்கள், மருத்துவ மாதுக்கள், மற்றும் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள்  வேர்ல்ட் விசன் உத்தியோகத்தர்கள் ஆகியோருடன் அப்பிரதேச கிராமிய அபிவிருத்திச்சங்க உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.    









Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624946

Translate