மட்டக்களப்பு கல்லடி - டச்பார் தூய அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று (17) ஞாயிற்றுக்கிழமை வெகு விமர்சையாக நடைபெற்றது.
கடந்த 1978 ஆம் ஆண்டு ஏற்பட்ட சூறாவளி அனர்த்தத்தில் இருந்து காப்பாற்றப்பட்ட டச்பார் வாழ் மக்களின் இறை நன்றியாக நிறுவப்பட்டு 36 வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடும் டச்பார் தூய அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா அருட்பணி ஜெரிஷ்டன் வின்சன்ட் அடிகளார் தலைமையில் பங்குத்தந்தை ரொசான் அடிகளார், அருட்தந்தையர்களான நவாஜி, நோட்டன் மற்றும் அருட்தந்தை லோரன்ஸ் லோகநாதன் அடிகளார் ஆகியோர் இணைந்து திருவிழா கூட்டுத் திருப்பலியினை ஒப்புக்கொடுதத்னர்.
அதேவேளை திருவிழாவினை முன்னிட்டு நேற்று சனிக்கிழமை (16) மாலை 5.00 மணிக்கு செபமாலையும் புனிதரின் பிரார்த்தனையும் அதனைத் தொடர்ந்து அருட்தந்தை எக்ஸ்.ஐ.ரஜீவன் அடிகளார் தலைமையில் நற்கருணை ஆராதனையும் ஜெபவழிபாடும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


0 facebook-blogger:
கருத்துரையிடுக