மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குடா பகுதியில் வசித்துவரும் பொது சுகாதார பரிசோதகரின் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேற்று (30) நள்ளிரவில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
ஞாயிறு, 31 ஜனவரி, 2016
சனி, 30 ஜனவரி, 2016
கிரானில் இடம்பெற்ற உடல் நல மேம்பாட்டு நிகழ்வு
(விது)
அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் ஆலோசனைக்கமைய விளையாட்டுத்துறை அமைச்சினால் முன்மொழியப்பட்ட “விளையாட்டு, உடல்நல மேம்பாட்டு தேசிய வாரத்தை” முன்னிட்டு “உடற்பயிற்சி மூலம் தொற்றா நோயின் தாக்கத்திலிருந்து எம்மைப் பாதுகாப்போம்;” என்னும் தொனிப்பொருளின் அடிப்படையில் கிரான் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட துவிச்சக்கரவண்டி ஓட்டும் உடற்பயிற்சி நிகழ்வு கிரான் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஆர்..ரவிச்சந்திரன் தலைமையில் வேர்ல்ட் விசன் நிறுவனத்தின் அனுசரணையில் 29.01.2016 வெள்ளிக்கிழமை கிரானில் இடம்பெற்றது.
வெள்ளி, 29 ஜனவரி, 2016
இரவு நேர மின்னொளி மென்பந்து கிறிக்கட் சுற்றுப்போட்டி
எதிர்வரும் 2016/02/04 முதல் 2016/02/07 வரையான காலப்பகுதியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சம்மாந்துறையில் முதன்முறையாக இரவு நேர மின்னொளி மென்பந்து கிறிக்கட் சுற்றுப்போட்டி ஒன்றை சம்மாந்துறை கல்லரிச்சல் கிங்ஸ் லெவன் விளையாட்டு கழகம் சம்மாந்துறை பொது மைதானத்தில் ஏற்பாடு செய்துள்ளது.
இப்போட்டி நிகழ்வில் கலந்து கொள்ள விரும்பும் விளையாட்டு கழகங்கள் மற்றும் அணிகள் முன்பதிவு செய்து கொள்ளுமாறு வேண்டப்படுகிறார்கள்.
மேலதிக விபரங்களுக்கு அழைக்கவும்:
நாசர்:075 4877905
பஸ்லீன்:075 5530820
றியாஸ்:077 4706942
பஸ்லீன்:075 5530820
றியாஸ்:077 4706942
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பொங்கல் விழா
இன் நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கலைக்கழகங்கள் விளையாட்டுக்கழகங்கள் என்பனவும் இவ் பொங்கல் விழாவில் பங்கு பற்றின.இதன் போது தேற்றாத்தீவு தேனுகா கலைக்கழகத்தின் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றமையும் குறிப்பிட்தக்கவிடயம்.
மிருதங்க வித்துவான் காலம் ஆனார்.
மட்டக்களப்பு மண்ணின் புகழ்பூத்த மிருதங்கவித்துவான் வேல்முருகு சிறிதரன் நேற்று அதிகாலை மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். மட்டக்களப்பு லேக்வீதியிலுள்ள அவரது வீட்டில் நேற்று முன் தினம் அதிகாலை 6 மணியளவில் இவர் மரணமடைந்துள்ளார். இவரது இறுதிக்கிரியைகள் நாளைய தினம் 29.01.2016 வெள்ளிக்கிழமை அவரது வீட்டில் நடைபெறவுள்ளன. இதேவேளை இவர் விரிவுரையாளராக பணியாற்றிய சுவாமி விபுலாநந்தா அழகியற்கற்கைகள் நிறுவகத்திற்கு நாளை நண்பகல் இவரது பூதவுடல் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு. விரிவுரையாளர்களின் மரியாதை அணிவகுப்புடன் மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக இவரது உடல் வைக்கப்படவிருக்கின்றது.
மட்டக்களப்பு மண்ணின் புகழ் பூத்த மிருதங்க வித்துவான் திரு. வேல்முருகு சிறிதரன் அவர்களை இன்று இம்மண் இழந்து நிற்கின்றது. இவர் 21.03.1958 அன்று இலங்கை கிழக்கு மாகாணத்தில் சம்மாந்துறையில் வீரமுனை திரு. திருமதி. வேல்முருகு தங்கரட்ணம் தம்பதியினருக்கு இரண்டாவது ஆண் வாரிசாகப் பிறந்தார். இவர் தனது தந்தை திரு. வேல்முருகு அவர்களை ஆரம்ப குருவாகக் கொண்டு மிருதங்கக் கலையைக் கற்றார்.
தொடர்ந்து அக்கலையை மேம்படுத்துவதற்காக யாழ்ப்பாணத்தில் வசித்த இந்திய மிருதங்க வித்துவானான ஏ. எஸ். இராமநாதன் அவர்களிடம் பல வருட காலம் மிருதங்கக் கலையினை சிறப்புறக் கற்றுத் தேர்ந்தார். தனது மிருதங்க அரங்கேற்றத்தினை மட்டக்களப்பில் நிகழ்த்தினார். பின்னர் சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரியின் மிருதங்க ஆசிரியராக 1986ஆம் ஆண்டிலிருந்து கடைமையாற்றினார்..
பின் 2001ஆம் ஆண்டில் இருந்து மிருதங்க போதனாசிரியராகவும்இ 2005 ஆம் ஆண்டில் இருந்து விரிவுரையாளராகவும் கடமையாற்றினார். இக் காலம் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தனது முதுதத்துவமானி மேற்படிப்பினை மேற்கொண்டு வந்தார். கடமைபுரியத் தொடங்கிய காலத்திலிருந்து நடைபெற்ற சகல விழாக்களிலுமஇ; இசைஇ நடன மாணவர்களின் ஆற்றுகைகளிலும் இவர் தனது திறமைமிக்க பங்களிப்பை ஆற்றி வந்தார்.
திரு. வேல்முருகு சிறிதரன் அவர்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அங்கீகரிக்கப்பட்ட மிருதங்க கலைஞராகவும் திகழ்ந்தார.; இலங்கை கலைஞர்களுக்கு மட்டுமல்லாமல் இலங்கை வந்த நடன கலைஞரான திருமதி உமா ஆனந்த் அவர்களின் நடன நிகழ்விற்கும் அணிசேர் கலைஞராக பங்களிப்பு செய்தார். இவர் வடஇலங்கை சங்கீத சபையினால் வழங்கப்பட்ட கலாவித்தகர் பட்டத்தினையும்இ இந்துக்கலாசார இந்து சமய தமிழ் மொழி அமுலாக்கல் அமைச்சின் அமைச்சரான திரு சி. இராஜதுரை அவர்களால்; 'லய இசைச்செல்வன்' என்ற பட்டத்தினையும்இ கல்லாறு சத்தியசாயி பாபா சபையினால் 'சர்ம வாத்தியகலாபதி' எனும் பட்டத்தினையும்இ மிருதங்க சாகரம்இ மிருதங்கக்கலைமாமணிஇ போன்ற பல பட்டங்களையும் பெற்ற மிருதங்கக் கலைஞராவார்.
இவர் மட்டக்களப்பில் தான் வாழ்ந்த காலத்தில் நடைபெற்ற இசை விழாக்கள்இ நிகழ்வுகளில் மட்டுமல்ல சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்திலும் இவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியதாகும். இன்று நாம் இக்கலைஞரை இழந்தமையானது ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும். இவரது இடத்தை நிவர்த்தி செய்ய முடியாத நிலைமையானது மிகவும் மன வேதனைக்குரியதொன்றாகும்.
அன்னாரது பிரிவால் துயருறும் குடும்பத்தாருக்கும்இ உற்றார் உறவினர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு இப்புகழ் மிக்க கலைஞரின் ஆத்ம சாந்திக்காக நாம் அனைவரும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
மட்டக்களப்பு மண்ணின் புகழ் பூத்த மிருதங்க வித்துவான் திரு. வேல்முருகு சிறிதரன் அவர்களை இன்று இம்மண் இழந்து நிற்கின்றது. இவர் 21.03.1958 அன்று இலங்கை கிழக்கு மாகாணத்தில் சம்மாந்துறையில் வீரமுனை திரு. திருமதி. வேல்முருகு தங்கரட்ணம் தம்பதியினருக்கு இரண்டாவது ஆண் வாரிசாகப் பிறந்தார். இவர் தனது தந்தை திரு. வேல்முருகு அவர்களை ஆரம்ப குருவாகக் கொண்டு மிருதங்கக் கலையைக் கற்றார்.
தொடர்ந்து அக்கலையை மேம்படுத்துவதற்காக யாழ்ப்பாணத்தில் வசித்த இந்திய மிருதங்க வித்துவானான ஏ. எஸ். இராமநாதன் அவர்களிடம் பல வருட காலம் மிருதங்கக் கலையினை சிறப்புறக் கற்றுத் தேர்ந்தார். தனது மிருதங்க அரங்கேற்றத்தினை மட்டக்களப்பில் நிகழ்த்தினார். பின்னர் சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரியின் மிருதங்க ஆசிரியராக 1986ஆம் ஆண்டிலிருந்து கடைமையாற்றினார்..
பின் 2001ஆம் ஆண்டில் இருந்து மிருதங்க போதனாசிரியராகவும்இ 2005 ஆம் ஆண்டில் இருந்து விரிவுரையாளராகவும் கடமையாற்றினார். இக் காலம் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தனது முதுதத்துவமானி மேற்படிப்பினை மேற்கொண்டு வந்தார். கடமைபுரியத் தொடங்கிய காலத்திலிருந்து நடைபெற்ற சகல விழாக்களிலுமஇ; இசைஇ நடன மாணவர்களின் ஆற்றுகைகளிலும் இவர் தனது திறமைமிக்க பங்களிப்பை ஆற்றி வந்தார்.
திரு. வேல்முருகு சிறிதரன் அவர்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அங்கீகரிக்கப்பட்ட மிருதங்க கலைஞராகவும் திகழ்ந்தார.; இலங்கை கலைஞர்களுக்கு மட்டுமல்லாமல் இலங்கை வந்த நடன கலைஞரான திருமதி உமா ஆனந்த் அவர்களின் நடன நிகழ்விற்கும் அணிசேர் கலைஞராக பங்களிப்பு செய்தார். இவர் வடஇலங்கை சங்கீத சபையினால் வழங்கப்பட்ட கலாவித்தகர் பட்டத்தினையும்இ இந்துக்கலாசார இந்து சமய தமிழ் மொழி அமுலாக்கல் அமைச்சின் அமைச்சரான திரு சி. இராஜதுரை அவர்களால்; 'லய இசைச்செல்வன்' என்ற பட்டத்தினையும்இ கல்லாறு சத்தியசாயி பாபா சபையினால் 'சர்ம வாத்தியகலாபதி' எனும் பட்டத்தினையும்இ மிருதங்க சாகரம்இ மிருதங்கக்கலைமாமணிஇ போன்ற பல பட்டங்களையும் பெற்ற மிருதங்கக் கலைஞராவார்.
இவர் மட்டக்களப்பில் தான் வாழ்ந்த காலத்தில் நடைபெற்ற இசை விழாக்கள்இ நிகழ்வுகளில் மட்டுமல்ல சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்திலும் இவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியதாகும். இன்று நாம் இக்கலைஞரை இழந்தமையானது ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும். இவரது இடத்தை நிவர்த்தி செய்ய முடியாத நிலைமையானது மிகவும் மன வேதனைக்குரியதொன்றாகும்.
அன்னாரது பிரிவால் துயருறும் குடும்பத்தாருக்கும்இ உற்றார் உறவினர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு இப்புகழ் மிக்க கலைஞரின் ஆத்ம சாந்திக்காக நாம் அனைவரும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
வியாழன், 28 ஜனவரி, 2016
போரதீவு விவேகானந்தா வித்தியாலய மாணவர்களுக்கு கௌரவிப்பு
கைத்தொழில் வாணிப அமைச்சின் ஆலோசனை நிபுணரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளரும், முன்னாள் பிரதி அமைச்சருமான சோமசுந்தரம் கணேசமூர்த்தியினைகோயில் போரதீவு மக்கள் வரவேற்பதனையும் இம்முறை வெளியான உயர்தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் கோவில் போரதீவு விவேகானந்தா வித்தியாலயத்திலிருந்து பல்கலைக்கழக அனுமதி பெறவுள்ள மாணவர்கள் கௌரவிக்கப் படுகின்றமையினையும் இங்கு காணலாம்.
புதன், 27 ஜனவரி, 2016
நல்லாட்சி அரசாங்கத்துக்கு அழுத்தங்களை கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் நாம் இருக்கின்றோம் - நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்
தமிழ் அரசியல் கைதிகளை சந்திப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோர் (26) மகசீன் சிறைச்சாலைக்கு சென்றிருந்தனர். இங்கு கைதிகளை சந்தித்த ஞா.ஸ்ரீநேசன் ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவிக்கையில்..
பிள்ளையானுக்கு விளக்கமறியல் இருவாரங்களுக்கு நீடிப்பு
மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியால் பேராலயத்தில் நத்தார் ஆராதனையின்போது சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நால்வரையும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இன்று புதன்கிழமை காலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராசா முன்னிலையில் நால்வரையும் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பிரதிப்மாஸ்டர், இரானுவ புலனாய்வு உத்தியோகத்தர் கலீல் மற்றும் கஜன் மாமா ஆகியோரே நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற தேகாரோக்கிய மேம்பாட்டு நிகழ்வுகள்.
(பழுவூரான்)
விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய வாரம் திங்கட்கிழமை ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 25ம் திகதி இலிருந்து எதிர்வரும் 30ம் திகதி வரை தேசிய வாரம் இடம்பெறும்.
பட்டிருப்பு தொகுதியினை சகல துறைகளிலும் வளம்பெறச் செய்து மக்களின் நல்வாழ்க்கைக்கு வழிகோலுவேன் .- முன்னாள் பிரதியமைச்சரும் அமைச்சின் ஆலோசகருமான .சோமசுந்தரம் கணேசமூர்த்தி
முன்னாள் பிரதியமைச்சரும் , தற்போதைய கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் விசேட ஆலோசகரும் , பட்டிருப்புத் தொகுதியின் ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதம அமைப்பாளருமாகிய .சோமசுந்தரம் கணேசமூர்த்தி அவர்கள் கடந்த வாரம் பட்டிருப்பு தொகுதியின் பல பிரதேசங்களிற்கு விஜயம் மேற்கொண்டு காணப்படும் குறைபாடுகளை மக்களிடம் நேரடியாக கேட்டறிந்தார்.
களுதாவளை , மகிழூர் , தேற்றாத்தீவு, பெரியாகல்லாறு , செட்டிபாளையம் , கிராங்குளம் , எருவில் ,பட்டிருப்பு , களுவாஞ்சிகுடி , துறைநீலாவணை ஆகிய பிரதேச மக்களினால் சோமசுந்தரம் கணேசமூர்த்தி அவர்களிற்கு பாரிய வரவேற்பளிக்கப்பட்டிருந்ததுடன் , மக்கள் தங்களுடைய தேவைகளை நேரடியாக தெரியப்படுத்திருந்தனர் .
களுதாவளை , மகிழூர் , தேற்றாத்தீவு, பெரியாகல்லாறு , செட்டிபாளையம் , கிராங்குளம் , எருவில் ,பட்டிருப்பு , களுவாஞ்சிகுடி , துறைநீலாவணை ஆகிய பிரதேச மக்களினால் சோமசுந்தரம் கணேசமூர்த்தி அவர்களிற்கு பாரிய வரவேற்பளிக்கப்பட்டிருந்ததுடன் , மக்கள் தங்களுடைய தேவைகளை நேரடியாக தெரியப்படுத்திருந்தனர் .
சோ.கணேசமூர்த்தி அவர்கள் உரையாற்றுகையில் எமது பிரதேசங்கள் சகல வழிகளிலும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது எனவே எமது பிரதேசங்களின் வளர்ச்சி எமது கரங்களிலே தங்கியிருக்கின்றது. ஆகவே அனைவரும் தங்களுடைய அரசியல் விருப்பு வெறுப்புக்களை புறம்தள்ளி தங்களுடைய தானங்களை விடுத்து பிரதேச முன்னேற்றத்திற்காய் உளைக்க என்னுடன் கைகோருங்கள், மீண்டுமொரு தேர்தல் வரும் பட்சத்தில் உங்களுக்கு விருப்பமான நிலையங்களுக்கு நீங்கள் தாராளமாக செல்லலாம் எனக் கூறியிருந்தார் , அத்துடன் எமது தமிழ் சமூகத்தினை கல்வியில் பிரகாசிக்க செய்ய என்னால் ஆன பல முயற்சிகளை எடுத்துள்ளேன் அவை அனைத்தும் வெற்றியளித்துள்ளது , வெகுவிரைவில் அனைத்து செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட இருக்கின்றன, மற்றும் இளைஞ்சர் யுவதிகளிற்கான வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்காக தொழிற்பேட்டைகளை பட்டிருப்புதொகுதியில் அமைப்பது தொடர்பாக உரிய அமைச்சர்களுடன் கலந்துரையாடி இருக்கின்றேன், வெகு விரைவில் எமது பட்டிருப்பு தொகுதியில் தொழிற் பேட்டைகள் அமைக்கப்படும் எனக்கூறியிருந்தார் .
மேலும் தற்போது அமைக்கப்பட்டிருக்கும் தேசிய அரசாங்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றான தமிழர்களிற்கான அரசியல் தீர்வினை பெற்றுக்கொடுப்பதில் அரசாங்கமும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் நாட்டின் பிரதமர் கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்களும் மிக முனைப்பாக செயற்படுவதாகவும் தெரிவித்திருந்தார் . எதிர்வரும் காலங்களில் முக்கிய பல அமைச்சர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தர இருப்பதாகவும் பல அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பித்து வைக்க இருப்பதாகவும் கூறியிருந்தார் .
பிரதேசங்களில் நடைபெற்ற நிகல்வுகளில் கிராமத்தின் தலைவர்கள், சங்கங்கள் , களகங்கள், பொது அமைப்புக்களின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டதுடன் தங்கள் பிரதேசங்களில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தரும்படியும் கூறியிருந்தனர் . சில பிரச்சினைகளிற்கான தீர்வுகள் தொலைபேசி மூலம் தீர்க்கப்பட்டிருந்தது. துறைநீலாவணை வைத்தியசாலைக்கு நோயாளிகளுக்கான புதிய கட்டில்கள் பெறுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது அத்துடன் பல பிரதேசங்களில். சோ.கணேசமூர்த்தி அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டவறே எந்தவித மேலதிகமான சேவைகளையும் பெற்றிராத நியலியில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும் .

செவ்வாய், 26 ஜனவரி, 2016
மட்டு தொழிநுட்ப கல்லூரியில் இடம்பெற்ற தேகாரோக்கிய மேம்பாட்டு நிகழ்வுகள்.
இரட்டை கொலை வழக்கில் கைதான பூ.பிரசாந்தனின் விளக்கமறியல் நீடிப்பு
மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் 2008ம் ஆண்டு இடம் பெற்ற இரட்டைக் கொலை தொடர்புடைய சந்தேக நபர்களான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் பொதுச்செயலாளர் உட்பட இரு சந்தேக நபர்கள் மீதான விளக்கமறியல் தொடர்ந்தும் இரு வாரங்களுக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தினால் நீடிக்கப்பட்டுள்ளது.
பட்டிருப்புத்தொகுதியின் படுவாங்கரை பிரதேசங்களிற்கு முன்னாள் பிரதியமைச்சர் .சோமசுந்தரம் கணேசமூர்த்தி அவர்கள் விஜயம்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரை பிரதேசங்களான கொக்கட்டிச்சோலை, முதலைக்குடா, காஞ்சிரங்குடா, கணேசபுரம், கொல்லநுலை, காட்டுவாசல், முனைக்காடு, மண்டூர் , பாலாச்சோலை , இரணமடு , காக்காச்சிவட்டை ,பழுகாமம் போன்ற பல பிரதேசங்களிற்கு முன்னாள் பிரதியமைச்சரும் , தற்போதைய கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் விசேட ஆலோசகரும், பட்டிருப்புத்தொகுதியின் ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதம அமைப்பாளருமாகிய சோமசுந்தரம் கணேசமூர்த்தி அவர்கள் கடந்த வாரம் நேரடியாக சென்று பார்வையிட்டிருந்தார். அப்பிரதேசங்கள் சகல வழிகளிலும் பின்தங்கிய நிலையில் காணப்படும் நிலையில் மக்கள் கவனிப்பாரற்று பல்வேறுபட்ட தேவைகளுடன் தங்களுடைய வாழ்க்கையினை கொண்டு செல்ல கஷ்டப்படுவதாகவும் , விசனம் தெரிவித்திருந்தனர்.
சில முக்கிய பிரச்சினைகளிற்கான தீர்வுகள் உடனடியாக உரிய அதிகாரிகளுடன் தொலைபேசிமூலம் கலந்துரையாடி தீர்வுகாணப்பட்டிருந்தது, பாலாச்சோலை கிராமத்திற்கான பேருந்து சேவையினை சீர்ப்படுத்தியமை, நீர்வளங்கல் சேவையில் புறக்கணிக்கப்பட்டிருந்த காஞ்சிரங்குடா, இரணமடு பிரதேசங்களினை நீர்வளங்கல் வடிகாலமைப்ப்பிற்கு பொறுப்பான பிராந்திய முகாமையாளருடன் தொடர்பு கொண்டு அக்கிரமத்தினையும் இணைக்கச்செய்யப்பட்டிருந்தது, மண்டூர் பிரதான வீதி ,களுவாஞ்சிக்குடியிலிருந்தான பழுகாமமூடு கொக்கட்டிச்சோலை செல்லும் பிரதான பாதை அமைப்பது சம்மந்தமாக உயர் அதிகாரிகளை நேரடியாக அளைத்து அதற்குரிய தீர்வும் காணப்பட்டிருந்தது. அத்துடன் மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் மக்களின் தேவைகளையும் கேட்டறிந்து அதற்குரிய தீர்வுகளை வெகுவிரைவில் பெற்றுத்தருவதாக முன்னாள் பிரதியமைச்சரினால் உறுதியளிக்கப்பட்டிருந்தது.அத்துடன் தனக்கு தேர்தலில் வாக்களித்த அனைத்து மக்களிற்கும் நன்றியினையும் தெரிவித்ததோடு தொடர்ந்து மக்களுடன் இருந்து அவர்களின் தேவைகளையும் தீர்த்து வைப்பதாக தெரிவித்திருந்தார் . சோ. கணேசமூர்த்தி அவர்களின் விஜயத்தின் பொது மக்கள் அவரை மிகவும் ஆர்வமுடன் வரவேற்றமை குறிப்பிடத்தக்க விடையமாகும்.
கட்சி பேதம் இன்றி சகல முரண்பாடுகளையும் களைந்து எமது பிரதேசங்களை அபிவிருத்திப்பாதையில் மிளிரவைக்க அனைவரும் உளச்சுத்தியுடன் ஒன்றிணைந்து செயற்படுவோம் – முன்னாள் பிரதியமைச்சர் சோமசுந்தரம் கணேசமூர்த்தி.
முன்னாள் பிரதியமைச்சரும் இதற்போதையகைத்தொழில் மற்றும் வணிகம் பற்றியஅமைச்சின் விசேட ஆலோசகரும், பட்டிருப்புத்தொகுதியின் ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதம அமைப்பாளருமாகிய சோமசுந்தரம் கணேசமூர்த்தி அவர்களிற்கு 24.01.1016 அன்று அவருடைய பிறந்த மண்ணான கோயில்போரதீவு மக்களினால் மிக பிரமாண்டமான வரவேற்பளிக்கப்பட்டிருந்தது. விழாவில் சோமசுந்தரம் கணேசமூர்த்தி அவர்களினால் அவர் மண்ணிற்கு அளிக்கப்பட்ட சேவைகளை நினைவுகூர்ந்து பாராட்டியதுடன் பிரதேசத்தின் அபிவிருத்தி சம்மந்தமாகவும் கலந்துரையாடப்பட்டிருந்தது.
நிகழ்வில் முன்னாள் பிரதியமைச்சர் உரையாற்றுகையில் தேர்தல் காலத்தினை போல் முரண்பாட்டுடன் செயற்படாமல் அனைத்து முரண்பாடுகளையும் களைந்து உங்களுடைய பிரதேசத்தினதும் , மக்களினதும் தேவைகளை உணர்ந்து அவற்றினை நிறைவேற்றும் வகையில் செயல்படுவதற்கு அனைவரும் முன்வாருங்கள். எந்தவித பாகுபாடும் இன்றி என்னால் இயன்ற சகல உதவிகளையும் செய்வதற்கு நான் தயாராக உள்ளேன் எனக் கூறியிருந்தார். அத்துடன் விழாக்குழுத் தலைவரினால் சுட்டிக்காட்டப்பட்ட பிரதேசத்தில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருவதாகவும் கூறியிருந்தார் .பாடசாலையில் உள்ள வளப்பற்றாக்குறையினையும் பார்வையிட்டிருந்தார். அத்துடன் 2015ம் ஆண்டு பலகலைக்களகத்திற்கு தெரிவான மாணவர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டிருந்தனர் .
நிகழ்வில் ஐக்கியதேசியக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் ,முன்னாள் பிரதியமைச்சரின் செயலாளர் மற்றும் கோயில்போரதீவினைச்சேர்ந்த ஆலயங்களின் தலைவர்கள் , சங்கங்கள் , களகங்கள் மற்றும் பொது அமைப்புக்களின் உறுப்பினர்கள் அத்துடன் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டதோடு தங்களுடைய தேவைகளையும் முன்னாள் பிரதியமைச்சரிடம் தெரியப்படுத்தியிருந்தனர் .
திங்கள், 25 ஜனவரி, 2016
நான் கல்விமான்களை பெருமிதத்தோடு மதிப்பவன். கருணா அம்மான் பதிலடி

கருத்து வெளியிட்டிருந்தார். அது பற்றி முன்னாள் பிரதி அமைச்சர்
ஊடகங்களிற்கு வழங்கிய மறுப்பறிக்கை. ”பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் அவர்கள் லங்காசிறிக்கு வழங்கிய செவ்வியில் என்னையும் சாடியுள்ளார். அவருக்கு பதில் கொடுக்க நான் கடமைப்பட்டுள்ளேன். முதலில் சிறிநேசன் அவர்களே உங்களுக்கு நன்றாகத்தெரியும் கல்விமான்களை பெருமிதத்தோடு மதிப்பவன் நான் ஏனென்றால் நான் அபிவிருத்தி குழுத்தலைவராக நான் இருந்தபோது நீங்கள் எனக்கு கீழ் கடமையாற்றியுள்ளீர்கள். உங்களையும் எவ்வாறு நான் மதித்து நடந்துள்ளேன் என்பது உங்களுக்கு நன்கு தெரியும் ஆனால் ஒரு கல்விமானுக்குரிய முதிர்ச்சியோடு உங்கள்
விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய விருத்தி தேசிய வாரம் - மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில்
விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய விருத்தி தேசியவாரம் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் அவர்களது தலைமையில் (25.02.2016) திங்கட்கிழமை பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் உதவிப் பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் போது பிரதேச செயலாளரினால் விளையாட்டுக்கள் தொடர்பாகவும் அதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் தொடர்பாகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. செயற்பாட்டு ரீதியான விளக்கங்கள் விளையாட்டு உத்தியோகத்தரினால் பயிற்றுவிக்கப்பட்டதுடன் பிரதேச செயலக அனைத்து உத்தியோகத்தர்களும் உடற்பயிற்சியில் ஈடுபட்டனர்.