புதன், 6 ஜனவரி, 2016

வறுமைக் கோட்டில் வெற்றிக் கொடி நாட்டிய பிள்ளைகள்! ஆனந்தக் கண்ணீர் சிந்தும் தாய்மார்

பொன்னாங்கண்ணி, மரக்கறி, தலையால் சுமந்து விறகு விற்றுத்தான் எனது மகளின் படிப்புக்கு செலவு செய்து வருகின்றேன் என மட்டக்களப்பில் உயிரியல் பிரிவில் சாதனை படைத்த  மாணவியின் தாயார் கண்ணீர்மல்க தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா வலயக்கல்விக்குட்பட்ட சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் தொழில்நுட்பத்துறையில் இருந்து மாவட்டத்தில் பல முக்கிய நிலையைப் பெற்று பாடசாலையில் சுமார் 14 மேற்ப்பட்ட மாணவர்கள் இம்முறை முதன் முதலாக பல்கலைகழகம் தெரிவாகியுள்ளனர்.
இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்திலே உயிரியல் தொழிநுட்ப பாடத்துறையில் இரண்டாம் நிலையினை விஜயராசா வனிதா பெற்றுள்ளார்.
இது குறித்து குறித்த மாணவியின் தாயார் கருத்துரைக்கையில்,
நான் பொன்னாங்கண்ணி, மரக்கறி, தலையால் சுமந்து விறகு விற்றுத்தான் எனது மகளின் படிப்புக்கு செலவு செய்து வருகின்றேன்.
எனது மகளுக்கு இரண்டாம் இடம் கிடைக்குமென நான் நினைத்திருக்கவில்லை, நான் பெரிதாக படித்ததும் இல்லை, எனக்கு இன்னும் ஐந்து பிள்ளைகள் படிக்கின்றார்கள்.
எனது குடும்ப வறுமை நிலை காரணமாக இருபிள்ளைகளை சிறுவர் ஆச்சிரமத்தில் சேர்ப்பதற்கு நினைத்து இருக்கின்றேன். ஏன் என்றால் அவ்வாறு மிகவும் வறிய நிலையில் நான் என்னுடைய பிள்ளைகளை பராமரித்துவருகின்றேன்.
எனது மகளின் உயர் படிப்புக்கு எனது நிலையை அறிந்து உதவிகள் செய்தால் எனது மகளின் உயர்படிப்புக்க மிகவும் உதவியாக இருக்கும், அதனை நான் மிகவும் எதிர்பார்க்கின்றேன்.
சித்தாண்டி – 3 பிரிவு அடிக்கடி வெள்ளம் வருவதினால் எங்களின் வீடு படிப்பதற்கு ஏற்ற இடமாக அமையாததினால் எனது மகள் அவருடைய நண்பியின் வீட்டிலிருந்துதான் சாதாரண தரம் மற்றும் உயர்தர படிப்பை மேற்கொண்டுவந்தார் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
குறித்த பாடசாலையில் மாவட்டத்தில் உயிரியல் தொழிநுட்பத்துறையில் ஏழு மாணவர்கள் மாவட்டத்தில் முக்கிய நிலையினை பெற்று மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளனர்.
அத்துடன் பொறியியல் தொழிநுட்ப துறையில் ஆறு மாணவர்களும், உயிரியல் விஞ்ஞானத்துறையில் ஒரு மாணவரும், கலைத்துறையில் ஒரு மாணவர் என இம்முறையில் கடந்த வருடத்தை விட அதிகமான மாணவர்கள் பல்ககை;கழக அனுமதியைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate