ஞாயிறு, 24 மே, 2015

தாய்ப்பால் புரைக்கேறி சிசு மரணம்


மட்டக்களப்பு மாவட்டம், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள கொம்மாதுறையில் 38 நாட்களேயான சிசுவொன்று தாய்ப்பால் புரைக்கேறியதில் மரணமடைந்துள்ளதாக பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் தெரிவித்தார்.


கொம்மாதுறை வாசிகசாலை வீதியைச் சேர்ந்த உதயகுமார் விதுஷினி (38 நாள்) எனும் சிசுவே மரணித்துள்ளது.சனிக்கிழமை அதிகாலையில் வழமை போன்று தன்னிடம் பால் அருந்திக் கொண்டிருந்த குழந்தை திடீரென மயக்கமடைந்ததாகவும் உடனடியாக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்ததாகவும் தாய் சாமித்தம்பி நிர்மலா (வயது 27) மரண விசாரணையில் தெரிவித்தார்.


எனினும் முன்னதாகவே குழந்தை மரணித்து விட்டது என்று வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம். றியாழின் பணிப்புரைக்கமைய ஏறாவூர் பொலிஸ் சார்ஜன்ற் ஏ.இஷற். ஹஸன் மற்றும் பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று மரண விசாரணை நடத்தினர்.

‘தாய்ப்பால் அருந்தும்போது புரைக்கேறியதால் சுவாசம் தடைப்பட்டு இதயம் செயலிழந்து மரணம் சம்பவித்துள்ளது’ என்று அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதுடன் பிரேதம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.


Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624984

Translate