வெள்ளி, 29 மே, 2015

காத்தான்குடியில்; மியான்மாரில் முஸ்லிம்களுக்கு எதிரான கொடுமையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு காத்தான்குடி தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் ஏற்பாட்டில் பர்மா முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டுத்தும் , அக் கொடுமைகளுக்கு எதிராக இலங்கை அரசு கண்டனத்தை வெளியிடக் கோரியும் இன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் பின் காத்தான்குடி கலாச்சார மண்டபத்திற்கு முன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் , பின் பேரணியாக காத்தான்குடி பிரதேச செயலகம் வரை சென்று முஸ்லிம்களுக்கெதிராக மியன்மார் அரசின் அராஜகங்கள் இலங்கை அரசு உடனடியாக கண்டிக்க வேண்டும்.


கடலில் தத்தளிக்கும் ரோஹிங்யா மக்களுக்கு இலங்கை அரசு மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டும் .

தான்தோன்றித்தனமாக மக்களைக் கொன்று குவிக்கும் மியன்மார் அரசுடன் தனது இராஜ தந்திர உறவுகளை இலங்கை அரசு முறித்துக் கொண்டு இலங்கைத் தூதுவரை அரசு மீள அழைத்துக் கொள்ள வேண்டும் என மூன்று விடயங்களை முன் வைத்து ஜனாதிபதியிடம் கையளிக்குமாறு கூறி மகஜர் காத்தான்குடி பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது .
































Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624964

Translate