செவ்வாய், 26 மே, 2015

மனித உரிமைகள் தொடர்பான டிப்ளோமா!

மனித உரிமைகள் தொடர்பான புதிய டிப்ளோமா கற்கை நெறியொன்று சிங்களம் தமிழ் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கொழும்பு மனித உரிமைகள் நிறுவகம் தெரிவித்துள்ளது.
08 மாத கால அளவைக் கொண்ட இக்கற்கை நெறியானது நாடளாவிய ரீதியிலும் சர்வதேசத்திலும் மிகுந்த செல்வாக்கினை கொண்டுள்ளது. தனியார் மற்றும் பொதுத்துறையை சார்ந்தவர்கள், மாணவர்கள் ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள், அரச சார்பற்ற நிறுவனத்தவர்கள், என அனைவரையும் இலக்காக கொண்டு இப்புதிய கற்கை நெறி ஆரம்பிக்கப்படவுள்ளது.

மனித உரிமை கல்வியலாளர்கள், செயற்பாட்டாளர்கள், தொழிலுநர்கள் , அரச, அரச சார்பற்ற கல்வி ஸ்தாபனங்கள் என அனைத்தும் ஒன்றிணைந்து மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் எடுக்கும் வரிசையிலேயே இக்கல்வி நெறி பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624964

Translate