திருகோணமலை மாவட்டத்தின் உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வில்கம்விகாரை பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த வெடிக்குச்சுகள் ஒரு தொகையினை திருகோணமலை மாவட்ட பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு புலனாய்வுப்பிரிவினர் மீட்டுள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் திருகோணமலை மாவட்ட பொதைப்பொருள் ஒழிப்பு புலனாய்வுப்பிரிவின் சாஜன்ட் ப..எஸ்.செனவிரட்ன தலைமையில் சென்ற பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு புலனாய்வுப்பிரிவினரே இவற்றினை மீட்டுள்ளனர்.
அனுமதியற்ற நிலையில் இவை கொண்டுவரப்பட்டு வில்கம்விகாரை பகுதியில் உள்ள கல்குவாரிக்கு அருகில் இவை மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் இதன்போது 128 வெடிக்குச்சுகள் மீட்கப்பட்டதாகவும் திருகோணமலை மாவட்ட பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு புலனாய்வுப்பிரிவினர் தெரிவித்தனர்.
இதன்போது சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

0 facebook-blogger:
கருத்துரையிடுக