வெள்ளி, 1 ஜனவரி, 2016

புதிய அரசின் பொறுப்புகளை நிறைவேற்றுகின்ற கடமை நமக்கு உள்ளது; பி.எஸ்.எம்.சார்ள்ஸ்


ஜனாதிபதியின் கொள்கைகளுக்கு அமைவாக, நல்லாட்சி என்ற சொற்பதத்தின் ஊடாக அதனுடைய பொறுப்புகளை நிறைவேற்றுகின்ற பணியாட் தொகுதியாக நாங்கள் இருக்கின்றோம் என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

மட்டு. மாவட்ட செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை 8.30க்கு 2016ஆம் ஆண்டுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
பல்வேறு சவால்களை எதிர்கொண்டதாக மட்டக்களப்பு மாவட்டம் காணப்பட்டது. இன்று புதியதொரு வருடத்தில் காலடியெடுத்து வைக்கின்றோம். 
பாரியதொரு உத்தியோகத்தர் தொகுதியைக்கொண்டு இந்த மாவட்ட செயலகமும் இதனோடு இணைந்த 14 பிரதேச செயலகங்களுமாக அரச நிர்வாகம் இயங்கிக் கொண்டிருக்கின்றது. 
ஜனாதிபதியின் கொள்கைகளின் ஊடாக, இந்த நல்லாட்சி என்ற சொற்பதத்தின் ஊடாக அதனுடைய பொறுப்புகளை நிறைவேற்றுகின்ற பணியாட் தொகுதியாக நாங்கள் இருக்கின்றோம். 
அரசாங்கம் வகுக்கின்ற திட்டங்கள் கொள்கைகள் ஊடாக அதனுடைய சுற்றுநிருபங்களின் ஊடாக அதனுடைய வழிகாட்டல்களின் ஊடாக கடமைப் பட்டியல்களைக் கொண்டு மக்களுக்காக சேவைகளை ஆற்றி வருகின்றோம்.
அதனை மேலும் மேம்பட்டதாக்கி தொடர்ந்தும் பணிசெய்ய வேண்டும் என்ற உறுதியை எடுத்துக் கொள்வோம் என தெரிவித்தார். 
மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இன்றைய நிகழ்வில், மாவட்ட செயலகத்தின் அனைத்து திணைக்களத் தலைவர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். 
தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில், மௌன அஞ்சலியை அடுத்து அரச உத்தியோகத்தர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து அரசாங்க அதிபர் உத்தியோகத்தர்களுக்காக உரையாற்றினார். 
இந்த நிகழ்வுகளை அடுத்து மாவட்ட செலயக கேட்போர் கூடத்தில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கான ஒன்று கூடல் நடைபெற்றது. 
இதில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) திருமதி ஜே.திருச்செல்வம், மாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் ஆகியோர் உத்தியோகத்தர்களுக்கு கருத்துரை வழங்கினர். 
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate