புதன், 28 அக்டோபர், 2015

கஞ்சா கொண்டு சென்றவர் கைது

திருகோணமலை- மூதூர்-பாலநகர் பிரதேசத்திலுள்ள வீதியால் கஞ்சா கொண்டு சென்று கொண்டிருந்த நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
அவரிடமிருந்து 60 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதன் போது கைது செய்யப்பட்டவர் மூதூர்-பாலநகர் பிரதேசத்தைச் சேர்ந்த எம்.கபீல் எனவும் இவர் கஞ்சா வைத்திருப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அவரிடமிருந்து கஞ்சா கைப்பற்றப்பட்டதோடு அவரையும் பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் இன்று புதன் கிழமை மூதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக மூதூர் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1625149

Translate