
(பழுகாமம் நிருபர்)
மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் இம்முறை தேசிய ரீதியில் இடம்பெறும் மெய்வல்லுனர் விளையாட்டு விழாவில் கலந்துகொள்ளவுள்ளனர். அவர்களுக்கான தனித்துவமான சீருடையினை நேற்று (10.10.2016) களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் வழங்கப்பட்டது.
இதுதொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இவ்வருடம் இடம்பெற்ற பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டியில் கிழக்கு மாகாணத்தில் பட்டிருப்பு கல்வி வலயம் முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்டது. அவர்கள் தற்போது தேசிய ரீதியில் கலந்துகொள்ளவுள்ளனர். பங்குபற்றும் 90 மாணவர்களுக்கு பட்டிருப்பு கல்வி வலயத்திற்கான தனித்துவமான சீருடையினை இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு வழங்கியுள்ளது. இந்நிகழ்வில் இராசமணிக்கம் மக்கள் அமைப்பின் பணிப்பாளர் இ.சாணக்கியன், மண்முனை தென் எருவில்பற்று கோட்டக்கல்வி பணிப்பாளர் வி.திரவியராஜா , பட்டிருப்பு கல்வி வலய உடற்கல்விக்கான சேவைக்கால ஆலோசகர் க.பேரின்பராஜா. மற்றும் வலய உடற்கல்வி ஆசிரியர்கள். மாணவர்கள் கலந்துகொண்டனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக