வியாழன், 20 அக்டோபர், 2016

மகிழூரில் இளைஞன் மீது இனம்தெரியாத இருவரினால் கொலை முயற்சி.

(சஞ்சு)
கண்ணகிபுரம், மகிழூர் கிராமத்தினைச் சேர்ந்த பொன்னம்பலம் யசோதரன்(பிரதிப்) எனும் இளைஞன் மீது நேன்று(19.10.2016) இனம்தெரியாத நபர் இருவரினால் கொலைமுயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இதன்போது  யசோதரன் மற்றும் தடுக்கச் சென்ற அவருடைய அண்ணன் பொன்னம்பலம் உதயசங்கர்; ஆகிய  இருவரும் பலத்த காயங்களிற்குள்ளாக்கப்பட்டு களுவாஞ்சிகுடி ஆதார வைத்திய சாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.







சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது பொன்னம்பலம் யசோதரன் இன்று மாலை 7.00 மணியளவில் தனது வீட்டில் இருந்த வேளை வீட்டிற்கு மோட்டார்சைக்கிளில் வருகைதந்திருந்த இருவர் தாங்கள் ரகசிய விசாரணைப்பிரிவில் இருந்து வருகை தந்திருப்பதாகவும் வெளியில் வரும்படியும் கூறியிருக்கின்றனர். வெளியில் செல்ல யசோதரன் மறுத்த வேளையில் வீட்டினுள் நுழைந்து சரமாரியாக கூரிய ஆயுதங்களால் தாக்கியிருக்கின்றனர், இதனைத் தடுக்கச்சென்ற அவருடைய அண்ணன் உதயசங்கரும் ஆயுதங்களால் தாக்கப்பட்ட நிலையில் தற்பொழுது வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இவ்வாறு தாக்கும் பொழுது வீட்டில் இருந்தவர்கள் கதறலினால் பயந்து தப்பியோடிய சந்தேகநபர்களை இளைஞர்கள் சிலர் பின்தொடர்ந்து விரட்டி செல்கையில், சந்தேகநபர்கள் ஓந்தாச்சிமடத்தில் விபத்துக்குள்ளான நிலையில், பின்தொடர்ந்த இளைஞர்களினால் வீதிப்போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளிற்கு விடயம் அறியத்தரப்பட்டு சந்தேகநபர்களை கைது செய்யப்பட்டிருக்கின்றனர். தற்போது களுவாஞ்சிகுடிப் பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபர்கள் தடுத்துவைக்கப்பட்டிப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

யசோதரன் ஓர் வறிய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் என்பதுடன் மத்தியகிழக்கு நாட்டிற்கு வேலைக்காக சென்று விடுமுறைக்காக நாடுதிரும்பியிருந்தார். விடுமுறை நிறைவுற்று நாளை மீண்டும் வெளிநாடு செல்லவிருந்த நிலையில் இவ்வாறான கொலைமுயற்சி இடம்பெற்றிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.








                               

Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624982

Translate