வெள்ளி, 21 அக்டோபர், 2016

அச்சத்தை ஏற்படுத்துயுள்ள சிகை அழகு நிலையங்கள் தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்குமாறு பிரதி பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை

(லியோன்)


மாணவர்களும்  ,பெற்றோர்களும் மத்தியில்  அச்சத்தை ஏற்படுத்துயுள்ள சிகை அழகு  நிலையங்கள் தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்குமாறு     மட்டக்களப்பு  நீதவான் நீதிமன்ற நீதிபதி  மாணிக்கவாசகர் கணேசராஜா  மட்டக்களப்பு மாவட்ட பிரதி  பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்
.

மட்டக்களப்பு நகர் பகுதிகளில் சிகை அலங்கார நிலையம் என்ற போர்வையில் பாடசாலை மாணவர்களை பயன்படுத்தி விபச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக  தெரிவிக்கப்படும்  தகவல் தொடர்பாக மட்டக்களப்பு  நீதவான்  நீதிமன்ற நீதிபதிக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய  குறித்த சம்பவம் தொடர்பாக ஆராயப்பட்டு குறித்த அழகு நிலையங்களின்  உரிமையாளர்களை உடன் கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர் படுத்துமாறும்  பொலிசாருக்கு  மட்டக்களப்பு  நீதவான் நீதிமன்ற நீதிபதி  மாணிக்கவாசகர் கணேசராஜா உத்தரவு பிறப்பித்துள்ளார் .


 குறித்த சம்பவம் தொடர்பாக  மாணவர்களும்  ,பெற்றோர்களும் மத்தியில்  அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும்  நிலையில் இவ்வாறான சமூக ,கலாச்சார சீரழிவுக்கு இடமளிக்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட பிரதி  பொலிஸ்மா அதிபருக்கு  மட்டக்களப்பு  நீதவான்  நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்  .
 
Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624982

Translate