யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட
சம்பவத்தைக் கண்டித்து கிழக்குப் பல்கலைக்கழகத்தினுடைய மட்டக்களப்பு, கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல்
கற்கைகள் நிறுவக மாணவர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று திங்கட்கிழமை பாரிய
ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர்
'பேனா தூக்கும்
கைகளில் ஆயுதம் ஏந்துவதற்கு வைக்கவேண்டாம்' என்ற கோஷத்துடன் குறித்த நிறுவகத்துக்கு முன்பாக மாணவர்கள்
ஒன்றுதிரண்டனர்.
இங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவிக்கையில், 'யாழ்ப்பாணத்தில்; சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர்களின் கொலை
தொடர்பில் நீதியான முறையில் விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதுடன், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட
வேண்டும்.
கடந்த யுத்தம் காரணமாக பெரும் கஷ்டத்துக்கு மத்தியில் கல்வியைத்
தொடர்ந்து பல்கலைக்கழகம்வரை செல்லும் தமிழ் மாணவர்கள் மீது இவ்வாறான வன்முறைகள்
கட்டவிழ்த்து விடப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
.
.
எனவே
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ்
அதிகாரிகளுக்கு கடுமையான தண்டனை வழங்குமாறு வலியுறுத்தி மாணவர்கள் இந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்டன
0 facebook-blogger:
கருத்துரையிடுக