ஞாயிறு, 16 அக்டோபர், 2016

சர்வதேச முதியோர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் வினா விடை போட்டிகள்

(லியோன்)

சர்வதேச முதியோர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் முதியோர்களுக்கான  சிறப்பு போட்டி நிகழ்ச்சிகள் மட்டக்களப்பில் நடைபெற்று வருகின்றது


இதற்கு அமைவாக கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில் முதியோர்களுக்கான வினா விடை போட்டிகள்  மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவை  உத்தியோகத்தர் எஸ் .அருள்மொழி தலைமையில் இன்று மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத்தில் நடைபெற்றது  .

சர்வதேச முதியோர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் முதல் நிகழ்வு இன்று   நடாத்தப்பட்ட   முதியோர்களுக்கான வினா விடை போட்டியில்  மட்டக்களப்பு மாவட்டத்தின்  14 பிரதேச செயலக பிரிவுகளில் இருந்து  முதியோர் சம்மேளன பிரதிநிதிகள் இந்த போட்டிகளில் கலந்துகொண்டனர் .

இந்நிகழ்வுக்கு நடுவர்களாக மட்டக்களப்பு மாநகர உதவி ஆணையாளர் என் .தனஞ்சயன் , சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்  எஸ் . மணிவண்ணன் , சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்  இ . அன்ரனிதாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர் .


சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் முதியோர்களுக்கான போட்டி நிகழ்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு இறுதி நிகழ்வாக  எதிர் வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி கல்லடி கடற்கரையில் நடைபெறவுள்ள முதியோர் தின விழாவில் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளமை குறிபிடத்தக்கது ..






  
Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624982

Translate